பும்ரா இல்லாமலே மும்பை பிளே ஆஃப் போனாங்க.. இப்ப தப்பு மொத்தமும் ஹர்திக் பாண்டியாதான் – இர்பான் பதான் விமர்சனம்

0
844
Hardik

நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தம் பத்து போட்டிகளில் விளையாடியிருக்கும் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி ஏழு போட்டிகளில் தோல்வி அடைந்து ஏறக்குறைய ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்து விட்டது. இதற்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியே காரணம் என இர்பான் பதான் விமர்சனம் செய்திருக்கிறார்.

இன்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அடித்து வெளியேறினார். மேலும் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி பவர் பிளேவிலும் பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் சரளமாக எங்கள் அடித்தது. அந்த அணியின் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் அரை சதம் அடித்து, 45 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். மெதுவாக இருந்த இப்படியான ஆடுகளத்தில், ஒரு வெளிநாட்டு வீரரை இவ்வளவு ரன்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி விட்டது ஆச்சரியமாக இருந்தது. அந்த அணி எளிதாக இருபதாவது ஓவரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மும்பை அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த பொழுது, சரியான பவுலர்களை வைத்து ஆரம்பத்திலேயே லக்னோ அணிக்கு நெருக்கடியை உண்டாக்கி இருக்க வேண்டும். இரண்டு ஓவர்களில் ஸ்விங் முடிந்து விடுவதால், முதல் ஓவரையே மிகச் சரியாக துஷாரா இடம் ஹர்திக் பாண்டியா கொடுத்தார். அடுத்து சரியாக பும்ராவையும் கொண்டு வந்தார். இதற்கு அடுத்து மூன்றாவது ஓவரை துஷாரா வீசினார்.

இந்த மூன்று ஓவர்களிலும் லக்னோ அணி ஒரு விக்கெட்டை இழந்ததோடு ரன்களையும் அடிக்க முடியவில்லை. இதற்கு அடுத்து நான்காவது ஓவரை பும்ராவிடமே கொடுக்க வேண்டிய நிலையில் போட்டியிருந்தது. ஆனால் அவர் கோட்சியிடம் கொடுக்க அவர் பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தார். அங்கிருந்து மொமண்டத்தை எடுத்த லக்னோ அணி, துஷாரா வீசிய,5வது ஓவரில் ரன்களை குவித்து விட்டார்கள். பவர் பிளே அவர்கள் பக்கம் சென்று விட்டது. இப்படியான நிலையில் ஹர்திக் பாண்டியா மீண்டும் 6வது ஓவரை பும்ராவிடம் கொடுத்தார். இதற்கு 4வது ஓவரையே கொடுத்திருக்கலாம். இப்படி இந்த தொடர் முழுவதும் அவர் கேப்டன் பொறுப்பில் தவறுகள் செய்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : கிரிஸ்க்குள் இருந்த ஆயுஷ் பதோனி பேட்.. ஆனாலும் ரன் அவுட் கொடுத்த அம்பயர்.. காரணம் என்ன?

இதுகுறித்து விமர்சனம் செய்திருக்கும் இர்பான் பதான் கூறும்பொழுது “கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா இல்லை. ஆனால் அவர்கள் பிளே ஆப் சென்றார்கள். தற்போது இந்த முறை பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடுகிறார். ஆனாலும் மும்பை இந்தியன்ஸ் அணி இப்படி மோசமான நிலையில் இருக்கிறது. ஏனென்றால் அணியை களத்தில் சரியாக நிர்வகிக்கவில்லை. ஹர்திக் பாண்டியா கேப்டனாக களத்தில் நிறைய தவறுகள் செய்தார். இதுதான் உண்மை!”என்று கூறியிருக்கிறார்.