வெறும் 13 ஓவர்.. சுனில் நரைன் அட்டகாச சாதனை.. ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி

0
856
KKR

இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில், ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச் சுற்றும் போட்டியில், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 13 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்யும் வெற்றிகரமான பாணி இந்த முறை எடுபடவில்லை. டிராவிஸ் ஹெட் இந்த வரை இரண்டாவது பந்தில் ஆட்டம் இழந்தார். அபிஷேக் ஷர்மா நான்கு பந்தை மற்றும் சந்தித்து 3 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து நிதீஷ் குமார் ரெட்டி 9, ஷாபாஷ் அகமத் 0 என அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

ஹைதராபாத் அணி நெருக்கடியில் சிக்க ராகுல் திரிபாதி மற்றும் கிளாசன் இருவரும் 62 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். கிளாசன் 21 பந்தில் 32, ராகுல் திரிபாதி 35 பந்தில் 55, கம்மின்ஸ் 24 பந்தில் 30 ரன் எடுக்க, ஹைதராபாத் அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 159 ரன்கள் எடுத்தது. ஸ்டார்க் பவர் பிளேவில் மூன்று விக்கெட் கைப்பற்றினார். பத்தாவது ஓவருக்கு பின் வந்த வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு முதல்முறையாக வந்த குர்பாஸ் 14 பந்தில் 23, சுனில் நரைன் 16 பந்தில் 21 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். மூன்றாவது இடத்தில் வந்த வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி 28 பந்தில் அரைசதம் அடித்தார். இதைத்தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 23 பந்தில் வரை சதம் அடித்தார்.

இந்த போட்டியில் வெங்கடேஷ் ஐயர் 28 பந்தில் 51, ஸ்ரேயாஸ் ஐயர் 24 பந்தில் 58 ஆட்டம்இழக்காமல் எடுக்க, கொல்கத்தா அணி 13.4 ஓவரில் இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஹைதராபாத் அணி, நாளை பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் வெற்றி பெறும் அணிவுடன் இரண்டாவது தகுதி சுற்றில் விளையாடும்.

- Advertisement -

இதையும் படிங்க : நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. தோனியும் கம்பீரும் ஒரே மாதிரிதான்.. இதுதான் ஒற்றுமை – ராபின் உத்தப்பா பேட்டி

மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் 482 ரன்கள் ஒட்டுமொத்தமாக குவித்து 15 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். இதற்கு முன்பாக ஷேன் வாட்சன் ராஜஸ்தான் அணிக்காக 2008 ஆம் ஆண்டு 472 ரன்கள் குவித்து 15 விக்கெட்டுகள் தாண்டி எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை தற்பொழுது முறியடிக்கப்பட்டிருக்கிறது.