கொல்கத்தாவை விட்டுட்டோம்.. சென்னையில் வச்சு பேசிக்கிறோம்.. தோல்விக்கு காரணம் இதான் – பாட் கம்மின்ஸ் பேச்சு

0
785
Cummins

இன்று ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்று போட்டி கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தோல்விக்கான காரணம் குறித்து பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு ராகுல் திரிபாதி 35 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்து விளையாடி 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கிளாசன் 21 பந்தில் 32 ரன்கள், கடைசியில் கம்மின்ஸ் 24 பந்தில் 30 ரன் எடுத்தார்கள். ஹைதராபாத் அணி 19.3 ஓவரில் 159 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஸ்டார்க் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் 14 பந்தில் 23, சுனில் நரைன் 16 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆனாலும் இதற்குப் பிறகு கொல்கத்தா அணிகின்றான் வேகம் எந்த இடத்திலும் குறையவில்லை.

வெங்கடேஷ் ஐயர் ஆட்டம் இழக்காமல் 28 பந்தில் 51 ரன், ஸ்ரேயா ஐயர் ஆட்டம் இழக்காமல் 24 பந்தில் 58 ரன் எடுக்க, கொல்கத்தா அணி 13.4 ஓவரில் இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அவ்வாறு வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. இதற்கு அடுத்து ஹைதராபாத் அணி சென்னையில் தங்கள் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் விளையாட இருக்கிறது.

தோல்விக்குப்பின் பேசிய ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் ” இந்த நாளை விட்டு விரைவாக வெளியில் வர வேண்டும். டி20 போட்டியில் நம் கையில் ஆட்டம் இல்லாத நாட்களும் இருக்க செய்யும். எங்களிடம் சில நல்ல தொடக்கங்கள் இருந்தன ஆனால் அதனை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. நாங்கள் பேட் மற்றும் பந்து என இரண்டிலும் சரியாகவே செயல்படவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : வெறும் 13 ஓவர்.. சுனில் நரைன் அட்டகாச சாதனை.. ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி

இம்பேக்ட் பிளேயராக உம்ரன் மாலிக்கை பயன்படுத்தும் திட்டம் எங்களிடம் இல்லை. நாங்கள் கூடுதல் பேட்ஸ்மேன் வேண்டும் என்று உணர்ந்து சனவீர் சிங்கை கொண்டு வந்தோம். கேகேஆர் அணி நல்ல முறையில் பந்து வீசினார்கள். நாங்கள் அடுத்து சென்னைக்கு சென்று விளையாட இருக்கிறோம். புது இடத்திற்கு நகர்ந்து சென்ற விளையாடுவது நல்ல உணர்வு. எங்களுக்கு வேலைகள் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.