வெங்கடேஷ் என்கூட தமிழ்லதான் பேசுவாரு.. நாங்க பைனல் வரதுக்கு இதெல்லாம் காரணமா இருந்தது – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

0
1117
Shreyas

இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில், நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச்சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிக் கொண்டன. இதில் கொல்கத்தா அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வெற்றிக்கான காரணங்கள் குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்து 19.3 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணிக்கு ராகுல் திரிபாதி 35 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். இன்று பவர் பிளேவில் மூன்று ஓவர்கள் வீசிய ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகள் அதிரடியாகக் கைப்பற்றினார்.

- Advertisement -

குஜராத் அகமதாபாத் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்த நிலையில், வெறும் 13.4 ஓவர்களில் இலக்கை எட்டி கொல்கத்தா அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் கடைசிவரை களத்தில் நின்று அதிரடியாக அரைசதங்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்கள்.

வெற்றிக்குப் பின் பேசிய கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் பொழுது “எங்கள் அணியின் செயல் திறனில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதே நேரத்தில் பொறுப்பு மிகவும் முக்கியமானது. இன்று ஒவ்வொருவரும் பொறுப்பெடுத்துக் கொண்டு விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. தொடர்ந்து பயணம் செய்யும் பொழுது புத்துணர்ச்சியாக இருப்பது மிகவும் முக்கியம். மேலும் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். இன்று நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய நாள். அதை மிகச் சிறப்பாக செய்திருக்கிறோம்.

இன்று ஒவ்வொரு பந்துவீச்சாளரும் செயல்பட்ட விதம் மற்றும் அவர்கள் விக்கெட் வீழ்த்திய விதம் கட்டாயம் என்று நான் நினைக்கிறேன். பந்துவீச்சில் நீங்கள் பல வெரைட்டிகளை வைத்திருப்பது உங்களுக்கு மிகவும் பரவசமான ஒன்றாக இருக்கிறது. குர்பாஸ் தன்னுடைய முதல் ஆட்டத்தில் விளையாடுகிறார். அவர் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : கொல்கத்தாவை விட்டுட்டோம்.. சென்னையில் வச்சு பேசிக்கிறோம்.. தோல்விக்கு காரணம் இதான் – பாட் கம்மின்ஸ் பேச்சு

நானும் வெங்கடேஷ் ஐயரும் அந்த ரன் விகிதத்தை தொடர்ந்து அப்படியே எடுத்துச் செல்ல வேண்டும் என்று விளையாடினோம். எனக்கு தமிழ் தெரியாது ஆனால் நன்றாக புரியும். வெங்கடேஷ் ஐயர் என்னிடம் தமிழில்தான் பேசுவார். நான் அவருக்கு ஹிந்தியில் பதில் சொல்வேன். இறுதிப் போட்டியில் நாங்கள் எங்களுடைய ஜோனில் இருக்க வேண்டும். எங்களால் தர முடிந்ததில் நாங்கள் சிறப்பாக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.