“என் டீமுக்கு எதிரா இப்படி பண்ணிட்டியே.. போப்பா சந்தோசமே இல்ல”- பட்லர் ஜெய்ஸ்வாலுக்கு வித்தியாச வாழ்த்து

0
574
Butler

இங்கிலாந்துக்கு எதிராக நடந்து கொண்டிருந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் என்ற மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்த பொழுது ரோகித் சர்மா அடித்த சதம் மிக முக்கியமாக அமைந்தது.

- Advertisement -

அதேபோல் பேட்டிங் மட்டும் இல்லாமல் பந்து வீச்சிலும் ஜொலித்த ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது தரப்பட்டது. இவர்கள் இருவருமே இந்தப் போட்டியில் இந்திய அணியின் முதல் எழுச்சிக்கு காரணமானவர்கள்.

இப்படி இருக்கும் பொழுது மூன்றாவது போட்டியில் முடிவில் சமூக வலைத்தளங்கள் எங்கும் இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வால், இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிரடி அரை சதங்கள் அடித்த சப்ராஸ் கான் இருவருமே ஆக்கிரமித்து இருக்கிறார்கள்.

இவர்கள் இருவருமே இளம் வீரர்கள் என்பதாலும், மேலும் இவர்கள் இருவருமே அச்சமற்ற முறையில் கிரிக்கெட் விளையாடுவதாலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு திடீரென மிகவும் பிடித்த வீரர்களாக மாறி இருக்கிறார்கள்.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் இந்தியா தாண்டி வெளிநாட்டு வீரர்களுக்கும் இந்த இரண்டு இந்திய இளம் வீரர்களும் பிடித்தமானவர்களாக மாறியிருக்கிறார்கள். இவர்களுக்கான பாராட்டுக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஜெய்ஸ்வால் ஐபிஎல் தொடரில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சீனியர் வீரர் மற்றும் இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளின் கேப்டன் ஜோஸ் பட்லர் தன்னுடைய ஐபிஎல் ஜூனியர் ஜெய்ஸ்வாலுக்கு வித்தியாசமான வாழ்த்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது “அவமானம்! இதை ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு எதிராக செய்திருக்கிறார். இது மிகவும் கடினமாக இருக்கிறது ஜெய்ஸ்வாலுக்காக சந்தோசப்பட முடியவில்லை. ஆனால் ஜெய்ஸ்வால் திறமைக்கு அவருக்கு கிடைக்கும் எல்லாவற்றுக்கும் அவர் தகுதியானவர். அவருடைய விளையாட்டுப் பசி மற்றும் தொழில் தர்மம் சிறப்பானது. என்ன ஒரு நட்சத்திரம் அவர்! எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க : “யோசிக்கவே வேணாம்.. வெற்றிக்கான பெருமையை இவங்களுக்கு கொடுங்க” – ரோகித் சர்மா ஓபன் ஸ்பீச்

தற்பொழுது ஜெய்ஸ்வால் நடந்து முடிந்திருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரை சதம் மற்றும் இரண்டு இரட்டை சதங்களுடன் மொத்தம் 545 ரன்கள் குவித்து, இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.