“யோசிக்கவே வேணாம்.. வெற்றிக்கான பெருமையை இவங்களுக்கு கொடுங்க” – ரோகித் சர்மா ஓபன் ஸ்பீச்

0
1885
Rohit

நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கான முக்கியமான காரணங்களை பார்க்கும் பொழுது, நமக்கு ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரல் போன்ற இளம் வீரர்கள் செயல் பட்ட விதம் மனதிற்கு உடனே தோன்றும்.

ஆனால் இந்திய அணி 33 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்த பொழுது, ரவீந்திர ஜடேஜாவை வைத்து இரட்டை சத பார்ட்னர்ஷிப்பை கொண்டு வந்த ரோகித் சர்மா பேட்டிங்வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.

- Advertisement -

இதேபோல் ரோகித் சர்மா உடன் இணைந்து விளையாடி சதம் அடித்த ரவீந்திர ஜடேஜாவின் பங்கும் வெற்றியில் மிகப்பெரியது. அவர் பேட்டிங் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் ஏழு விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

இவர்கள் முதல் இன்னிங்ஸில் எடுத்த ரன்கள்தான், அடுத்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பந்து வீசுவதற்கான ரன்களை கொடுத்தது. அவர்கள் பந்துவீச்சில் அந்த கண்களை வைத்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்டதினால்தான், அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி விளையாட்டு துவங்கும் முன்பே 126 ரன்கள் முன்னிலையும் கிடைத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து தான் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் அடித்த இரட்டை சதம் மற்றும் அவருடன் இணைந்து சர்பராஸ் கான் இரண்டு இரட்டை சதங்கள் எல்லாமே கணக்கில் வருகின்றன. இதன் காரணமாகத்தான் ஆட்டநாயகனாக ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெற்றிக்கான காரணம் குறித்து ரோகித் சர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்பொழுது “இளம் வீரர்களுக்குதான் கிரெடிட் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அதிக அனுபவம் கிடையாது. இந்த இரண்டு இளம் வீரர்கள் அறிமுகமானார்கள். அவர்கள் மிகச் சிறப்பான கேரக்டர்களை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் தொடர்ந்து இங்கு இருக்க விரும்புகிறார்கள். எனவே இப்படி ஒரு வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதையும் படிங்க : 2முறை இரட்டை சதம்.. ஆனால் ஜெய்ஸ்வாலுக்கு நடந்த சோகம்.. உலக கிரிக்கெட்டில் முதல் முறை

அஸ்வின் கிளம்பி சென்றதை எடுத்துக் கொண்டால், எப்பொழுதுமே குடும்பம்தான் முதன்மையானது. அவர் வீட்டு சூழ்நிலையை கேட்டு, அதற்கான முடிவை அவர் எடுத்ததுமே அதில் எங்களுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்துமே கிடையாது. அவர் குடும்பத்துடன் சென்று இருக்க விரும்பினார். அதேபோல் சூழ்நிலை சரியானதும் உடனே கிளம்பி அணியுடன் வந்து இணைந்து விட்டார். இது அவருடைய கேரக்டரை காட்டுகிறது” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -