2024 டி20 உலக கோப்பை வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஏறக்குறைய அனைத்து நாடுகளும் தங்கள் உலககோப்பை வீரர்களை அறிவித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும் 15 பேர் கொண்ட தங்களது அணியை அறிவித்துள்ளது.
ஆனால் அந்த அணியில் குறிப்பிடத்தக்க விஷயமாக ஆஸ்திரேலியா அணியின் அனுபவ நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் தற்போது ஐபிஎல் இல் டெல்லி அணியில் கலக்கிக் கொண்டிருக்கும் தொடக்க ஆட்டக்காரர் பிரேசர் மெக்கார்க் ஆகிறது பெயர்கள் இடம் பெறவில்லை.
இந்த ஆஸ்திரேலியா அணிக்கு ஆல் ரவுண்டர் மிச்சல் மார்ஸ் அதிகாரப்பூர்வ கேப்டனாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வருடமாக ஆஸ்திரேலியா டி20 அணியை இடைக்கால அடிப்படையில் வழி நடத்தி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஏறக்குறைய 18 மாதங்கள் இல்லாத போதிலும் கேமரூன் கிரீன் மற்றும் ஆஸ்டன் ஆகர் ஆகியோர் திரும்பவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உலகக்கோப்பை டி20 அணிக்கு கேப்டனாக நியமித்தது குறித்து மிட்சல் மார்ஸ் கூறும் பொழுது
“எனது நாட்டிற்காக விளையாடுவதே ஒரு மகத்தான பாக்கியம், மேலும் டி20 அணியை வழிநடத்துவது இன்னும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். சமீப காலமாக நாங்கள் சில வலுவான வெற்றிகளை பெற்றிருக்கிறோம்.அந்த வெற்றி இந்தப் பரந்து விரிந்த உலகக்கோப்பை தொடரிலும் தொடரும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
2015, 2023 உலகக்கோப்பை ஒரு நாள் அணியிலும், 2021 டி20 உலகக்கோப்பை அணியிலும் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். 34 வயதான வீரர் ஸ்மித் 2010 ஆம் ஆண்டு கரீபியனில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்றார். 2014ஆம் ஆண்டு முதல் எந்த உலகக் கோப்பை தொடரிலும் ஆஸ்திரேலியா அணியில் இவரது பெயர் இல்லாமல் இருந்ததில்லை.
இருப்பினும் சமீப காலங்களில் இவரது டி20 செயல்பாடுகள் ஆஸ்திரேலியா அணிக்கு திருப்தியை அளிக்காததால் இவர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகிறது. இருப்பினும் கிலென் மேக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டானிஸ் மற்றும் டிம் டேவிட் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களுக்கு ஆஸ்திரேலியா நிர்வாகம் முன்னுரிமை அளித்துள்ளது.
இதையும் படிங்க:கிரிஸ்க்குள் இருந்த ஆயுஷ் பதோனி பேட்.. ஆனாலும் ரன் அவுட் கொடுத்த அம்பயர்.. காரணம் என்ன?
டி20 உலக கோப்பையில் பங்குபெறும் 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலியா அணி:
மிட்ச் மார்ஷ் (கேட்ச்), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.