டி20ல 300 ரன் சீக்கிரம் வரப்போகுது.. பசங்க முன்ன மாதிரி எல்லாம் கிடையாது – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
15
DK

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடும் முறையால், ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் மாறி இருக்கிறது. அவர்கள் நடத்து ஐபிஎல் தொடரில் மட்டும் 250 ரன்களுக்கு மேல் மூன்று முறை எடுத்திருக்கிறார்கள். இதுகுறித்து ஆர்சிபி அணியின் தினேஷ் கார்த்திக் பேசியிருக்கிறார்.

தற்பொழுது ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி வந்து இருக்கின்ற காரணத்தினால், பெரும்பாலும் எல்லா அணிகளும் ஒரு கூடுதல் பேட்ஸ்மேனை பயன்படுத்தவே விரும்புகின்றன. எனவே விக்கெட் குறித்தான அழுத்தம் எந்த அணிகளுக்கும் இருப்பதில்லை. எல்லா பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் டி20 கிரிக்கெட்டுக்கு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம்தான் அதிக முறை அமைக்கப்படுகிறது. இந்த இரண்டு காரணங்களும் டி20 கிரிக்கெட்டில் அணிகள் குவிக்கும் ரன்களின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் மாற்றி இருக்கிறது.

நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ஒரு கட்டத்தில் 300 ரன்கள் சாதாரணமாக அடிக்கும் என்கின்ற நிலையில் இருந்தது. ஆனால் நடுவில் நான்கு விக்கெட்டுகள் திடீரென சரிந்ததால் அந்த அணி 266 ரன்கள் எடுத்தது. அந்த அளவிற்கு அந்த அணி அதிரடியாக விளையாடியது.

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “ஐபிஎல் தொடர் ஆரம்பித்து 32 போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் 250 ரன்கள் தாண்டி அணிகள் நிறைய முறை அடித்துவிட்டன. இந்த வடிவ கிரிக்கெட்டில் உலகத்தில் எங்கும் நடக்காத விஷயமாக ஐபிஎல் தொடரில் அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : நைட் பார்ட்டி பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் கோப்பை ஜெயிக்க முடியாது – சுரேஷ் ரெய்னா வெளிப்படையான விமர்சனம்

தற்பொழுது வீரர்கள் மிகவும் அச்சமற்ற முறையில் விளையாடுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. வீரர்கள் பவுண்டரிகளை அடிக்கிறார்கள். எனவே கூடிய சீக்கிரத்தில் 300 ரன்கள் அணிகள் அடிக்கும் நிலை வரப்போகிறது. இம்பேக்ட் பிளேயர் விதியால் பேட்டிங் நீளம் அதிகமாகிறது. இது பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தத்தை உருவாக்குகிறது. அதே பேட்ஸ்மேன்கள் அச்சம் இல்லாமல் பல சிறப்பான ஷாட்டை விளையாடுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.