நாங்க பவுலிங் பண்ணப்பவே பிளான் பண்ணிட்டோம்.. இவங்க மூணு பேருக்கும் பெரிய நன்றி சொல்லிக்கிறேன் – அபிஷேக் ஷர்மா பேட்டி

0
284
Abishek

சிஎஸ்கே அணி நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இரண்டு போட்டிகளை ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது. அதே சமயத்தில் வெளியே சென்று டெல்லிக்கு எதிராக விசாகப்பட்டினத்திலும், இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஹைதராபாத்திலும் தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்து இருக்கிறது.

இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதலில் பந்து வீசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஆட்டத்தின் பந்துவீச்சின் இரண்டாவது பகுதியில் மிகச் சிறப்பாக செயல்பட்டது. ஆடுகளம் மெதுவாக இருந்ததை பயன்படுத்தி, அந்த அணியின் வேகப்பந்து பேச்சாளர்கள் மெதுவாக வீசி, சிஎஸ்கே அணியின் ரன் வேகத்திற்கு பெரிய முட்டுக்கட்டை போட்டார்கள்.

- Advertisement -

சிஎஸ்கே அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்தாலும் கூட, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர்களின் திட்டத்துக்கு முன்னால் அதிரடியாக விளையாட முடியவில்லை. எனவே சிஎஸ்கே அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சிவம் துபே அதிகபட்சமாக 24 பந்தில் 45 ரன்கள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்று புள்ளி மூன்று ஓவரில் 50 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா மூன்று பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 12 பந்தில் 37 ரன்கள் குவித்தார். முகேஷ் சௌத்ரியின் ஒரே ஓவரில் 26 ரன்கள் எடுத்தார்.

பேட்டிங் செய்வதற்கு சாதகம் இல்லாத சூழ்நிலையில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடிய விதத்தின் காரணமாக, இதற்கு அடுத்து வந்த எந்த ஹைதராபாத் பேட்ஸ்மேன் மீதும் ரன் அழுத்தம் ஏற்படவில்லை. அந்த அணி வெகு எளிதாக 18.1 ஓவரில் சிஎஸ்கே அணியை வென்றது. ஆட்டநாயகன் விருது அபிஷேக் ஷர்மாவுக்கு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : இன்னைக்கு பெரிய விலை கொடுத்துட்டோம்.. எங்க தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான் – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி

ஆட்டநாயகன் விருது வென்ற அபிஷேக் சர்மா பேசும்பொழுது “நாங்கள் முதலில் பந்து வீசிய காரணத்தினால் இது மிகவும் மெதுவான விக்கெட் என்பதை உணர்ந்தோம். எனவே நாங்கள் பவர் பிளேவில் புதிய பந்தில் ரன்கள் எடுக்க திட்டமிட்டோம். ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஒரு அணியாக நாங்கள் தயார் ஆவதற்கு நல்ல நேரம் கிடைத்தது. எங்களின் திட்டப்படி நாங்கள் பவர் பிளேவில் ரன்கள் குவித்தோம். தனிப்பட்ட முறையில் பெரிய ஸ்கோர் முக்கியம். ஆனால் இன்று நான் ஒரு பிளோவில் சென்றேன். அடுத்த ஆட்டத்தில் நான் பெரிய ஸ்கோருக்கு செல்ல முயற்சி செய்கிறேன். இது என்னுடைய கடின உழைப்புக்கு கிடைத்திருக்கிறது. இதற்கு என்னுடைய அப்பா, யுவராஜ் சிங் பாஜி மற்றும் பிரைன் லாரா சார் ஆகியோருக்கு நன்றி” எனக் கூறி இருக்கிறார்.