இன்னைக்கு பெரிய விலை கொடுத்துட்டோம்.. எங்க தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான் – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி

0
719
Ruturaj

இன்று சிஎஸ்கே அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.

இன்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சிவம் துபே 24 பந்தில் அதிரடியாக 45 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 23 பந்தில் ஆட்டம் இழக்காமல் 31 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு, அந்த அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா வெறும் 12 பந்துகளில் அதிரடியாக 37 ரன்கள் எடுத்தார். மூன்றாவது இடத்தில் வந்த எய்டன் மார்க்ரம் 50 ரன்கள் எடுத்தார். இதனால் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த போட்டியில் ரன் அழுத்தம் எதுவும் இல்லை.

எனவே 18.1 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி, நான்காவது போட்டியில் இரண்டாவது வெற்றியை அந்த அணி பெற்றது. சிஎஸ்கே அணிக்கு இது நான்காவது போட்டியில் இரண்டாவது தோல்வியாக அமைந்தது. சேப்பாக்கத்தை தாண்டி வெளியில் வந்து விளையாடிய இரண்டு போட்டிகளையும் சிஎஸ்கே அணி தோற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்விக்கு பின் பேசிய சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் “நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் ஆடுகளம் மெதுவாக இருந்தது. அவர்கள் பந்து வீச்சின் போது இரண்டாவது பகுதியில் மிகச் சிறப்பாக பதிவு செய்தார்கள். ஆட்டத்தை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சூழ்நிலையை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அவர்கள் விடவில்லை. அதே சமயத்தில் போட்டியின் ஆரம்பத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் என்று நம்புகிறேன். ஆனால் இதற்குப் பிறகு போட்டியில் அவர்கள் உள்ளே வந்தார்கள். கருப்பு மண் ஆடுகளம் என்பதால் மெதுவாக இருக்கும் என்று நினைத்தோம் ஆனால் இது மெதுவிலும் மெதுவாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 6 ஓவருக்கு 78 ரன்.. பவர் பிளேவிலேயே தோற்ற சிஎஸ்கே.. ருதுராஜ் செய்த தவறு என்ன?.. ஹைதராபாத் அபார வெற்றி

இதனால் அவர்கள் மைதானத்தில் பவுண்டரி தூரமாக இருக்கும் பகுதியை குறிவைத்து பந்து வீசினார்கள். மேலும் ஹெட்டுக்கு முதல் ஓவரில் விட்ட கேட்ச் மிகப்பெரிய விலையாக அமைந்துவிட்டது. ஆனாலும் இந்த போட்டியில் அவர்களை 19ஆவது ஓவருக்கு நாங்கள் அழைத்துச் சென்று இருக்கிறோம். நாங்கள் 170 முதல் 125 ரன்கள் எடுத்திருக்கலாம். ஆட்டத்தின் பின்பகுதியில் கொஞ்சம் பனிப்பொழிவு வந்தது. ஆனாலும் கூட இறுதிக்கட்டத்தில் மொயின் அலி வந்து பந்து வீசியது, பனிப்பொழிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று காட்டியது” என்று கூறி இருக்கிறார்.