4 மெகா சாதனைகள்.. ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் 3 முறை.. ஹைதராபாத் டெல்லி அணிக்கு எதிராக அதிரடி பேட்டிங்

0
1314
SRH

இன்று ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வழக்கம் போல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடியில் மிரட்டி இருக்கிறது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் மீண்டும் அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்கள்.

- Advertisement -

இந்த ஜோடி பவர் பிளேவில் மட்டும் 125 ரன்கள் குவித்து டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்தது. டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி மொத்தம் 38 பந்துகளில் 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தது. அபிஷேக் ஷர்மா 12 பந்தில் 2 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். டிராவிஸ் ஹெட் 32 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 89 ரன்கள் குவித்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து வந்த எய்டன் மார்க்ரம் 1(3), ஹென்றி கிளாசன் 15(8) அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ரன் வேகம் தடைபட்டது. இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஷாபாஷ் அகமத் பொறுப்புடன் விளையாடி 47 பந்தில் 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். நிதீஷ்குமார் ரெட்டி 27 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் விளையாடிய ஷாபாஷ் அகமத் 29 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் நான்கு ஓவர்களுக்கு 55 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க : 36 பந்து 125 ரன்.. டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஹைதராபாத் உலக சாதனை.. ஹெட் அபிஷேக் வெறித்தன பேட்டிங்

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 266 ரன்கள் எடுத்ததின் மூலம், ஒரே ஐபிஎல் தொடரில் 260 ரன்கள் மூன்று முறை எடுத்த முதல் அணி என்கின்ற மெகா சாதனையை படைத்திருக்கிறது. மேலும் இந்த போட்டியில் டி20 கிரிக்கெட்டில் பவர் பிளேவில் அதிக ரன்கள் குவித்தது, ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 100 ரன்கள் அடித்தது, 10 ஓவர்களில் 158 ரன்கள் என, முதல் 10 ஓவர்களில் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தது என மொத்தம் நான்கு மெகா சாதனைகளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது