36 பந்து 125 ரன்.. டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஹைதராபாத் உலக சாதனை.. ஹெட் அபிஷேக் வெறித்தன பேட்டிங்

0
177
Head

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதல் முறையாக சொந்த மைதானமான டெல்லி அருண் ஜெட்லி மைதானத்திற்கு திரும்பியது. இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா உலக சாதனை படைத்திருக்கிறார்கள்.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியில் இஷாந்த் சர்மா காயம் அடைந்த காரணத்தினால் அதை சரி செய்வதற்காக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. ஹைதராபாத் அணியில் உனட்கட் நீக்கப்பட்டு மயங்க் மார்க்கண்டே உள்ளே கொண்டுவரப்பட்டார்.

- Advertisement -

டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தங்கள் சொந்த மைதானத்தில் டாஸ் வென்று ஹைதராபாத் அணியை முதலில் பேட்டிங் செய்ய வைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை, அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அடுத்த ஆறு ஓவர்களில்உலகத்திற்கு காட்டினார்கள்.

டெல்லி அணியின் கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் 19 ரன்கள் உடன் துவங்கிய ஹைதராபாத் அணி, மூன்று ஓவர்களில் 52 ரன்கள், ஐந்து ஓவர்களில் 102 ரன்கள், ஆறு ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் 125 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தது. இதில் டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் அரைசதத்தை அடித்தார்.

இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் பவர் பிளேவில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரகளை பதிவு செய்தது. இதற்கு முன்னால் 107 ரன்கள் ஐபிஎல் தொடரில் எடுக்கப்பட்டது ஐபிஎல் தொடரில் சாதனையாக இருந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக அதிகபட்ச பவர் பிளே சாதனை படைக்கப்பட்டது. மேலும் ஐந்து ஓவர்களில் நூறு ரண்களை தொட்டதால், ஐபிஎல் வரலாற்றில் குறைந்த ஓவரில் 100 ரன்களை அடித்த அணி என்ற சாதனையும் படைக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 277 மற்றும் 287 என ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரண்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் இன்று மீண்டும் தங்களது சாதனையை இரண்டாவது முறையாக முறியடிக்குமா என்கின்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.