தோல்விக்கு பின் தோனிக்கு விருது.. சாக்‌ஷி தோனி வெளியிட்ட பதிவு.. சிஎஸ்கே ரசிகர்களையே மிஞ்சிட்டாங்க

0
2681
Sakshi Dhoni

டெல்லி அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனி ஆடிய அதிரடி ஆட்டம் குறித்து, அவரது மனைவி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடரில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52 ரன்களும், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் பிரத்விஷா 43 ரன்களும் குவித்தனர். இவர்கள் மூவரின் அதிரடியால் டெல்லி அணி 120 பந்துகளில் 191 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது.

- Advertisement -

பிறகு 192 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியை டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தி விட்டனர். அணியின் தொடக்க விக்கெட்டுகள் மிக விரைவிலேயே ஆட்டம் இழந்ததால் அதற்குப் பிறகு அனுபவ வீரர் ரகானே, டைரி மிச்சல் ஆகியோர் மட்டுமே ஓரளவு சிறப்பாக விளையாடி சென்னை அணியை கரை சேர்த்த முயன்றனர். எனினும் அந்த முயற்சி சிறிது நேரம் மட்டுமே தாக்கு பிடித்தது. ரஹானே 45 ரன்களும் டாரி மிச்சல் 34 ரன்களும் குவித்து வெளியேறினர்.

அதன் பிறகு கடந்த இரு போட்டிகளில் பேட்டிங் செய்ய களமிறங்காத மகேந்திர சிங் தோனி விசாகப்பட்டினத்தில் களமிறங்கிய போது அவரது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு மகேந்திர சிங் தோனி களமிறங்குவதால் மைதானமே ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது. அதுமட்டுமில்லாமல் அவர் களமிறங்கிய முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க ரசிகர்கள் உற்சாகத்தில் அதிக அளவு கரகோஷம் எழுப்ப தொடங்கினர்.

பின்னர் கலீல் அகமதின் ஓவரில் ஒரு அபாரமான சிக்ஸரை விளாச, கடைசி ஓவரில் ஆண்ரிக் நோக்கியா வீச வந்தார். அந்த ஓவரில் 4,6,4,6 என்று இருபது ரன்களை அடித்து நொறுக்க, சென்னை அணியின் ரசிகர்களுக்கு தோல்வியைத் தாண்டி வின்டேஜ் டோனியை பார்த்து விட்டோம் என்ற உற்சாகத்தில் மிதந்தனர். 16 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட தோனி நான்கு பவுண்டரி, மூன்று சிக்சர் என 37 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இருப்பினும் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தோனியின் இந்த அதிரடி இன்னிங்சால் அவருக்கு ‘ எலக்ட்ரிக் ஸ்டிரைக்கர் ஆப் த மேட்ச்’ விருது கொடுக்கப்பட்டது.

- Advertisement -

சாக்‌ஷி தோனி

தோனி ரசிகர்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் திளைத்திருக்க தோனியின் மனைவி சாக்‌ஷி, தோல்விக்கு பிறகு தோனியின் அதிரடி ஆட்டம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “முதலில் ரிஷப் பண்டுக்கு வாழ்த்துக்கள்..மாஹி! உங்களது அதிரடி பேட்டிங்கால் தோல்வி அடைந்ததை கூட மறந்து விட்டேன்” என்று கூறி அவர் விருது வாங்கிய புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார். காயத்திலிருந்து மீண்டு வந்த டெல்லி அணியின் கேப்டன் பன்டிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இன்னும் எதுவும் மாறல என்ன அடி.. தல தயவுசெய்து எனக்காக இதை செய்யுங்க – பிரெட் லீ வேண்டுகோள்

இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் மிக வைரலாகி வருகிறது. இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள சென்னை அணி தற்போது முதல் தோல்வியை சந்தித்திருக்கிறது. இரண்டு போட்டிகளின் தோல்வி மூலம் மனம் தளர்ந்திருந்த டெல்லி அணி இந்த வெற்றியின் மூலம் புதிய புதிய உத்வேகத்தை பெற்றுள்ளது.