இன்னும் எதுவும் மாறல என்ன அடி.. தல தயவுசெய்து எனக்காக இதை செய்யுங்க – பிரெட் லீ வேண்டுகோள்

0
2487
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு ஒரு நாள் முன்னதாகவே, சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகிக் கொண்டு புதிய கேப்டனாக இளம் வீரர் ருதுராஜை கொண்டு வந்தார். அவரின் இந்த முடிவு ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை உண்டு செய்திருந்தது. ஆனாலும் அவருடைய முடிவுக்கு ரசிகர்கள் மரியாதை கொடுத்தார்கள்.

மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி தன்னுடைய பேட்டிங் இடத்தை எட்டாவது ஆக மாற்றிக் கொண்டார். நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் அவர் பேட்டிங் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகவே இல்லை. இதன் காரணமாக மைதானத்திற்கு வந்த ரசிகர்கள் இந்த வகையிலும் ஏமாற்றம் அடைந்தார்கள்.

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக இரண்டு போட்டியிலும், சிஎஸ்கே அணி பேட்டிங் செய்யும்பொழுது, மின் திரையில் தோனி காட்டப்படும் பொழுதெல்லாம், அவர் அடுத்து பேட்டிங் செய்ய வருவார் என்கின்ற எதிர்பார்ப்பில், ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு பெரிய அளவில் இருந்தது.

இப்படி சிஎஸ்கே அணியின் சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் ரசிகர்களுக்கு கிடைக்காத அந்த தல பேட்டிங் தரிசனம், இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் போட்டியை பார்க்க வந்திருந்த ரசிகர்களுக்கு கிடைத்தது. பேட்டிங் செய்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகி இருந்த தோனி, இன்று விளையாடிய விதத்தில் ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களும் ஐபிஎல் கோப்பையை வென்றதை விட பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இன்று பேட்டிங் செய்ய வந்த தோனி முகேஷ் குமார் பந்துவீச்சில் முதல் பந்தையே பவுண்டரிக்கு அடித்தார். மூன்றாவது பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் கலீல் அகமது பந்துவீச்சில் ஒரு சிக்சர், கடைசியில் நோர்க்கியா ஓவரில் இரண்டு சிக்சர் என மூன்று சிக்ஸர்களை பிறக்க விட்டார். மொத்தம் 16 பந்துகளை சந்தித்து 231 ஸ்ட்ரைக் ரேட்டில் 37 ரன்கள் அடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து இருந்தாலும் சிஎஸ்கே ரசிகர்கள் மிகப்பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : இதுக்காக 2 வருஷம் காத்திருந்தேன்.. இன்னைக்கு நான் முடிவு பண்ணது இதைத்தான் – ரிஷப் பண்ட் பேட்டி

இந்த போட்டிக்குப் பிறகு தோனியின் பேட்டிங் குறித்து பேசிய பிரட் லீ ” அவர் இன்று இரவு பேட்டிங் செய்த விதத்தை பார்க்கும்பொழுது, அவர் இன்னும் அப்படியே தான் இருக்கிறார் அவருடைய பேட்டிங் இருக்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிகிறது. நான் அவரது பேட்டிங்கில் இருந்து இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன். அவர் சிறப்பாக இருக்கிறார். நீங்கள் மேலே வந்து விளையாட வேண்டும். அப்படி இல்லை என்றால் தயவுசெய்து சிஎஸ்கே அணி நிர்வாகம் அவரை மேலே அனுப்பி விளையாட வைக்க வேண்டும்” என்று மகிழ்ச்சியாகக் கூறி இருக்கிறார்.