ஐபிஎல் 2024: 6 போட்டிகளில் 5 தோல்வி.. ஆர்சிபி பிளே ஆஃப் போக என்ன செய்ய வேண்டும்.. முழு கால்குலேஷன்

0
476

இந்த ஐபிஎல் சீசனை பொருத்தவரை வலுவான கிரிக்கெட் வீரர்கள் இருந்தும் பரிதாபமான நிலையில் இருக்கிற ஒரே அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதானால் ஆர்சிபி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பும் படிப்படியாக குறைந்து வருகிறது.

நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்தது. இருந்தபோதிலும், இந்த கடின இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி 16 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட் ரன்ரேட் நல்ல நிலையிலும், பெங்களூர் அணிக்கு மோசமாகவும் தற்போது இருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே முழுக்க முழுக்க பேட்டிங் ஆர்டரை மட்டுமே நம்பி களம் இறங்கியது பெங்களூர் அணி. எதிரணி 200 ரன்கள் அடித்தாலும் அதை பேட்டிங்கில் மட்டுமே பெங்களூர் அணி வெல்ல முடியும். பந்துவீச்சினால் எதிரணியை கட்டுப்படுத்துவது சிரமம் என்று ஆரம்பத்திலேயே கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்திருந்தார்கள்.

ஆனால் தற்போது பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே அந்த அணி மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறது. விராட் கோலி, தினேஷ் கார்த்திக்கை தவிர மற்ற வீரர்கள் யாரும் தொடர்ச்சியான பங்களிப்பினை அளிக்க மறுக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மேக்ஸ்வெல் விளையாடிய 6 போட்டிகளில் மூன்று போட்டிகள் டக்அவுட் ஆகி வெளியேறி வேதனைக்குரிய விஷயம்.

ஆர்சிபி பிளே ஆஃப் வாய்ப்பு

இனி பெங்களூர் அணியை பொறுத்தவரை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் இனி எஞ்சியிருக்கும் 8 போட்டிகளில் ஆறு போட்டிகள் கட்டாயமாக நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெறுவது அவசியம். ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு எளியதாக தகுதி பெறலாம். எட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடங்களை பிடிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.

- Advertisement -

தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணி அடுத்த இரண்டு போட்டிகளான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டிகள் சற்று சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பிளே ஆஃப் ரேசில் நிலைத்திருக்க அடுத்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெறுவது கட்டாயம்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 சீசன்.. இந்த 4 டீம்தான் ப்ளே ஆஃப் போகும் – அம்பதி ராய்டு கணிப்பு

அடுத்து குஜராத் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் மேலும் சென்னை, பஞ்சாப் டெல்லி ஆகிய அணிகளுக்கிடையான போட்டிகளில் விளையாடுகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை அணிக்கு எதிரான போட்டி சற்று சவால் நிறைந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே பெங்களூர் அணி இத்தனை சவால்களைக் கடந்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பது அந்த அணி நிர்வாகத்தின் கையிலும் அணி வீரர்களின் கையில் மட்டுமே இருக்கிறது.