ஐபிஎல் 2024 சீசன்.. இந்த 4 டீம்தான் ப்ளே ஆஃப் போகும் – அம்பதி ராய்டு கணிப்பு

0
179
Ambati

உலகின் நம்பர்-1 பிரான்சிசைஸ் டி20 லீக், கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி துவங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாட இருக்கிறது.

இந்த முறை தென்னிந்தியாவை சேர்ந்த இரண்டு அணிகள் முதல் போட்டியில் மோதிக் கொள்வதாலும், மேலும் மகேந்திர சிங் தோனி கேப்டனாக வழிநடத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ், விராட் கோலி அங்கம் வகிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக் கொள்வதால், போட்டி குறித்த நிறைய எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடரில் 10 அணிகளாக எண்ணிக்கை உயர்த்தப்பட்ட பிறகு, ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதே மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது. பத்து அணிகளில் நான்கு அணிகள் மட்டுமே முன்னேற முடியும் என்பது, உலகக் கோப்பைக்கு ஈடான கடினமான ஒரு விஷயம். எனவே ஐபிஎல் தொடரின் போட்டித் தன்மை என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் விருந்தான ஒன்றாக அமைகிறது.

நடக்க இருக்கும் 17வது சீசன் ஐபிஎல் தொடரை பொருத்தவரையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் வெளிப்படையாக வலிமையாக தெரிகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் ஆக இருக்கின்ற காரணத்தினால், அவர்களது வலிமை குறித்து சந்தேகம் ஏதுமில்லை.

- Advertisement -

கடந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் இந்த முறை மிகவும் வலிமையாக தெரிகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த முறையே சிறந்த வெற்றிகளை ஆரம்பத்தில் பெற்று கடைசியில் சொதப்பியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சொந்த மைதானமான இடங்கள் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக மாற்றப்பட்டு இருப்பதும், இந்தியா பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்புவதும் பெரிய பலமாக அந்த அணிக்கு மாறியிருக்கிறது. மேலும் ஹர்திக் பாண்டியா இல்லாமலும் குஜராத் டைட்டன்ஸ் வலிமையாகவே இருக்கிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி கடந்த ஆண்டு கோப்பையை வென்று ஓய்வு பெற்ற அம்பதி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் குறித்து தன்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் நிறையவற்றை பகிர்ந்து வருகிறார். இந்த வகையில் அவர் நடக்க இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் எனவும் கணித்திருக்கிறார்.

இதையும் படிங்க : 2024 ஐபிஎல் அணிகளிடம் இருந்து அழைப்பு வந்ததா? – சர்ப்ராஸ் கான் சீரியஸான பதில்

அம்பதி ராயுடு இதுகுறித்து கூறும் பொழுது ” இந்த ஐபிஎல் சீசனில் என்னுடைய கணிப்புப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் இந்த நான்கு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். இதில் இரண்டு சீசனில் ஒரு முறை பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியை அம்பதி ராயுடு தேர்வு செய்யாதது ஆச்சரியமாக இருக்கிறது.

- Advertisement -