விராட் கோலியாலயே முடியல.. ரசலை பார்த்து திட்டம் போட்டோம்.. இதனாலதான் தோத்தோம் – பாப் டு பிளிசிஸ் பேட்டி

0
972
Faf

இன்று ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், கேகேஆர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் விளையாடிய ஆர்சிபி அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும். கேகேஆர் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது.

நடந்து முடிந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் முதலில் வந்து வீசியது. ஆர்சிபி அணிக்கு கேமரூன் கிரீன் 31, தினேஷ் கார்த்திக் 20 ரன்கள் எடுத்தார்கள். ஒரு முனையில் வழக்கம் போல் நிலைத்து நின்று விளையாடிய விராட் கோலி 59 பந்துகளில் 83 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார். ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. ரசல் மற்றும் ஹர்சித் ராணா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணிக்கு சுனில் நரைன் 47, பில் சால்ட் 30, வெங்கடேஷ் ஐயர் 50, ஸ்ரேயாஸ் ஐயர் 39, ரிங்கு சிங் 5 ரன்கள் எடுக்க, அந்த அணி 16.5 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆர்சிபி அணியில் இம்பேக்ட் பிளேயர் ஆக வந்த வேகப்பந்துவீச்சாளர் வைசாக் விஜயகுமார் நான்கு ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் மட்டுமே தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 2015 ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி அணியிடம் தோல்வி அடைந்ததில்லை என்கின்ற சாதனையை கேகேஆர் அணி தொடர்ந்து தக்க வைத்திருக்கிறார். இந்த போட்டிக்கு முன்பாக அந்த அணியின் மெண்டல் கவுதம் கம்பீர் கனவில் கூட பெங்களூரு அணியை தோற்கடிக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தோல்வி குறித்து பேசி உள்ள ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளிசிஸ்
“நாங்கள் விளையாடும் பொழுது ஆடுகளம் இரட்டை வேகம் கொண்டதாக இருந்தது. ஆனால் அவர்கள் விளையாடும் பொழுது மிகவும் சிறப்பாக இருந்தது. விராட் கோலி விளையாட சிரமப்பட்டதை நீங்களே பார்த்திருப்பீர்கள். நாங்கள்ஒன்று அல்லது இரண்டு விஷயங்களை புதிதாக முயற்சி செய்துபார்த்திருக்கலாம். ஆனால் நரைன் மற்றும் சால்ட் இருவரும் பேட்டிங் செய்த விதத்தில் பவர் பிளேவிலேயே ஆட்டத்தை முடித்து விட்டார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : 9 வருட ஆர்சிபி-ன் சோகம்.. நரைன் வெங்கடேஷ் சூறாவளி ஆட்டம்.. கோலி போராட்டம் வீண்.. கேகேஆர் வெற்றி

எங்களுக்கு ஸ்பின்னுக்கு மேக்ஸ்வெல் இருக்கிறார். ஆனால் இன்றைய ஆடுகளத்தில் எங்களுக்கு இரண்டு பக்கமும் திருப்பக்கூடிய மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர் தேவையாக இருந்தது. விரல் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் உதவி இல்லை. நாங்கள் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர் கரண் சர்மாவை இம்பேக்ட் பிளேயராக எடுக்க நினைத்தோம். ஆனால் ரசல் வேகபந்து வீச்சில் நல்ல கட்டர்கள் வீசும் பொழுது ஆடுகளத்தில் உதவி இருந்தது. இதைப் பார்த்து நாங்கள் வைசாக் விஜயகுமாரை கொண்டு வந்தோம். அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் நல்ல முறையில் செயல்பட்டார்” என்று கூறி இருக்கிறார்.