மயங்க் யாதவ் கிரேட் டேலண்ட்.. பையன்கிட்ட இந்த விஷயம் செம.. நாங்க தோத்தது இதனாலதான் – பாப் டு பிளிசிஸ் பேட்டி

0
2580
Faf

இன்று ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி பெங்களூரு அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது. நான்காவது போட்டியில் விளையாடிய பெங்களூர் அணிக்கு இது மூன்றாவது தோல்வியாக அமைந்தது.

இன்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் கு
குயிண்டன் டி காக் 56 பந்தில் 82 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 21 பந்தில் 40 ரன்கள் எடுத்தார்கள். பெங்களூர் தரப்பில் மேக்ஸ்வெல் நான்கு ஓவர்களுக்கு 23 ரன்கள் மட்டும் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணிக்கு முன்னணி நட்சத்திர பேட்ஸ்மேன்களிடமிருந்து பெரிய பங்களிப்பு வரவில்லை. அந்த அணிக்கு மகிபால் லோம்ரர் 13 பந்தில் 33 ரன், ரஜத் பட்டிதார் 21 பந்தில் 29 ரன்கள் எடுத்தார்கள். பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன் மட்டுமே எடுத்தது. லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் லக்னோ அணியின் இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அது வேகமாக பந்து வீசியதோடு சிறப்பாகவும் வீசி, நான்கு ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். இவரது வேகத்தை சமாளிக்க முடியாமல் மிடில் வரிசையில் மூன்று விக்கெட்டுகள் சரிந்தது பெங்களூர் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இன்றைய போட்டிக்குப் பின் பேசிய பெங்களூரு கேப்டன் “நாங்கள் இரண்டு சிறந்த வீரர்களுக்கு கேட்ச் விட்டது எங்களுக்கு பெரிய பின்னடைவை உருவாக்கி விட்டது. குயின்டன் 25 – 30 ரண்களில் இருந்தார். பூரன் பெரிய ரன்கள் எடுக்காமல் இருந்தார். இந்த நிலையில் இருவருக்கும் கேட்ச் விட்டது நாங்கள் கூடுதலாக 60 ரன்கள் கொடுப்பதாக அமைந்துவிட்டது. ஐபிஎல் போன்ற ஒரு தொடரில் இந்தத் தவறை செய்தால் வெல்ல முடியாது.

- Advertisement -

இதையும் படிங்க : 16 டாட் பந்து.. 156.7 கிமீ.. மயங்க் யாதவ் மெர்சல் சாதனை.. ஆர்சிபியை சுருட்டியது லக்னோ

எல்லா இளம் வேகப்பந்துவீச்சாளர்களையும் சந்திக்கும் பொழுது, அவர்கள் பந்து வீசும் ஆக்சன் புதிதாக இருப்பதால் தடுமாற்றம் இருக்கவே செய்யும். மயங்க் யாதவ் பந்துவீச்சை சந்திக்கும் பொழுதும் அப்படியான பிரச்சனை இருந்தது. ஆனால் அதைத் தாண்டிஅவர் கிரேட் டேலண்ட். அவரோட வேகம் மற்றும் துல்லியம் என்னை மிகவும் கவர்ந்தது. நாங்கள் ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசவில்லை ஆனால் இறுதியில் நன்றாக வீசினோம். நாங்கள் வெற்றி பெற எங்கள் அணியில் இருக்கும் சிறந்த வீரர்கள் சிறப்பாக வர வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.