நடப்பு 17 வது ஐபிஎல் சீசனில் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
லக்னோ அணி முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த நிலையில், அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 20 (14), தேவ்தத் படிக்கல் 6 (11) ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதற்கு அடுத்து குயிண்டன் டி காக் உடன் இணைந்த மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, 24 (15) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய குயிண்டன் டி காக் 81(56) ரன்கள் குவித்தார்.
லக்னோ அணி கொஞ்சம் நெருக்கடியாக இருந்த நிலையில் அதிரடி வீரர் பூரன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஆர்சிபி விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத் தவறவிட்டார். அங்கிருந்து ஐந்து சிக்ஸர்கள் அடித்த பூரன் 21 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 40 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. மேக்ஸ்வெல் 3, யாஸ் தயால் 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதற்கடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆர்சிபி அணிக்கு சிறப்பாக ஆரம்பித்து ஆனால் அடுத்தடுத்து விராட் கோலி 22 (16), கேப்டன் பாப் டு பிளிசிஸ் 19 (13) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து அதிவேக இந்திய இளம் பந்துவீச்சாளர் மயங்க் யாதவின் அதிரடி ஆரம்பித்தது.
மயங்க் யாதவின் அதிவேகத்தில் சிக்கிய மேக்ஸ்வெல் 0 (2), கேமரூன் கிரீன் 9 (9), ரஜத் பட்டிதார் 29 (21) ரன்கள் எடுத்து வரிசையாக வெளியேறினார்கள். இதைத்தொடர்ந்து அனுஜ் ராவத் 11 (21), தினேஷ் கார்த்திக் 4 (8), மகிபால் லோம்ரர் 33 (13), மயங்க் டாகர் 0 (1), சிராஜ் 12 (8), டாப்லி 3* (6) ரன்கள் எடுக்க, ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 153 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணியின் தரப்பில் மயங்க் யாதவ் நான்கு ஓவர்களுக்கு 14 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க : 6,6,6,6,6.. கெயிலை தாண்டி பூரன் மிரட்டல் சாதனை.. ஆர்சிபி செஞ்ச ஒரே தவறு 5 சிக்ஸர்.. லக்னோ ரன் குவிப்பு
இந்த போட்டியில் 156.7 கிலோ மீட்டர் வேகத்தில் மயங்க் யாதவ் வீசியிருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை 155 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசிய பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையை படித்திருக்கிறார். இவர் மொத்தம் மூன்று முறை 155 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசி இருக்கிறார். இரண்டாவது இடத்தில் இரண்டு முறை உம்ரன் மாலிக் வீசியிருக்கிறார். மேலும் இந்த போட்டியில் 24 பந்துகள் வீசி அதில் 16 பந்துகள் ரன் இல்லாமல் வீசி இருக்கிறார்.