சாம்சன் சங்கக்கராவின் மாஸ்டர் மைண்ட்.. இம்பேக்ட் பிளேயரை உள்ளே தூக்க தெறி பிளான்

0
251
Jaiswal

17 வது ஐபிஎல் சீசன் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. கடந்த முறை லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் பகுதியில் சிறப்பாக விளையாடி இரண்டாம் பகுதியில் மோசமாக விளையாடி வெளியேறியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜுரல், ரவிச்சந்திரன் சாகல் என பெரிய இந்திய நட்சத்திர பட்டாளம் இருக்கிறது. அதே சமயத்தில் ஜோஸ் பட்லர், டிரண்ட் போல்ட், ஷிம்ரன் ஹெட்மையர் மற்றும் ரோமன் பவர் போன்ற சிறந்த வெளிநாட்டு அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள். இப்படி மிகச் சரியான கலவையில் அமைந்திருந்தோம் கடந்த முறை அவர்கள் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பகுதியில் சரியாக விளையாடாமல் வெளியேறி இருந்தார்கள்.

- Advertisement -

எனவே இதன் காரணமாக இந்த முறை எப்படியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதோடு கோப்பையையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் தெளிவாக திட்டங்களை தீட்டி வருகிறார்கள். இம்பேக்ட் பிளேயர் விதி இருக்கின்ற காரணத்தினால், ஆல் ரவுண்டர்கள் தேவை குறைந்து வருகிறது. இதை உணர்ந்து கடந்த முறை வாங்கி இருந்த ஜேசன் ஹோல்டரை வெளியே விட்டு விட்டார்கள். அந்த இடத்திற்கு அதிரடி பினிஷர் ரோமன் பவலை வாங்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிளேயிங் லெவனில் கேப்டன் சஞ்சு samsung மற்றும் பயிற்சியாளர் சங்கக்கரா ஒரு ட்விஸ்ட்டை வைத்திருக்கிறார்கள். இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மயர், துருவ் ஜுரல், ரவிச்சந்திரன் அஸ்வின், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான், டிரெண்ட் போல்ட் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இந்த பிளேயிங் லெவனில் நான்காவது இடத்திற்கு ரியான் பராக்கை உயர்த்தி, இம்பேக்ட் பிளேயராக ரோமன் பவலை வெளியில் வைத்திருக்கிறார்கள். பேட்டிங் செய்யும்பொழுது பேட்ஸ்மேன் லெவனில் வைத்து, பந்துவீச்சாளரைதான் இம்பேக்ட் பிளேயராக வைத்திருப்பார்கள். ஆனால் இவர்கள் அப்படியே மாற்றி ஒரு மாஸ்டர் பிளான் போட்டு இருக்கிறார்கள். என்ன மாஸ்டர் பிளான் என்றால், ஒருவேளை இருக்கும் ஆறு பேட்ஸ்மேன்களும் 20 ஓவரை விளையாடிவிட்டால், ரோமன் பவலை உள்ளே எடுக்க வேண்டியது இல்லை. அதற்குப் பதிலாக பந்து வீசும் பொழுது பந்து வீச்சாளரை எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டு இருக்கிறார்கள். ஆல் ரவுண்டர் இல்லாத குறையை இதன் மூலம் சரி கட்ட நினைக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் 2024: டீமில் 5 தமிழக வீரர்கள்.. குஜராத் டைட்டன்ஸின் வலிமையான உத்தேச பிளேயிங் லெவன்

மேலும் ஒரு வேலை ரோமன் பவலை இம்பேக்ட் பிளேயராக உள்ளே கொண்டு வருவதாக இருந்தாலும் கூட, பிளேயிங் லெவனில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இருப்பதால் துவக்க வீரர் பட்லர் ஆட்டம் இழந்து இருந்தால் அவருடைய இடத்திற்கு கொண்டு வரலாம். ஒருவேளை பட்லர் விளையாடிக் கொண்டிருந்து ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்து இருந்தால் அவருடைய இடத்திற்கும் கொண்டு வரலாம். இம்பேக்ட் பிளேயரை மாற்றுவதற்கு வசதியாக இரண்டு துவக்க ஆட்டக்காரர்களையும் வைத்திருக்கிறார்கள். சாம்சனும் சங்கக்கராவும் சேர்ந்து செய்திருக்கும் இந்த மாஸ்டர் பிளான் பெரிய அளவில் சமூக வலைதளத்தில் பாராட்டப்பட்டு வருகிறது.