ஐபிஎல் 2024: டீமில் 5 தமிழக வீரர்கள்.. குஜராத் டைட்டன்ஸின் வலிமையான உத்தேச பிளேயிங் லெவன்

0
215
GT

இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. இதில் குஜராத் அணியில் மட்டும் மொத்தம் ஐந்து தமிழக வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். சாய் சுதர்சன், சாய் கிஷோர், விஜய் சங்கர், ஷாருக் கான் மற்றும் சந்திப் வாரியர் என பார்ப்பதற்கு தமிழக அணி போலவே காட்சியளிக்க கூடிய வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி இருக்கிறது.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் உள்ளே வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்சன் சாய் கிஷோர் மற்றும் விஜய் சங்கர் என மூன்று தமிழக வீரர்களை வாங்கியது. இந்த முறை நடைபெற்ற மினி ஏலத்தில் ஷாருக் கான் 7.40 கோடி, சந்திப் வாரியர் 50 லட்சம் என இரண்டு தமிழக வீரர்களை வாங்கியிருக்கிறது. இன்று மும்பை அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் குறைந்தபட்சம் மூன்று தமிழக வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் 17ஆவது சீசனுக்காக நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அஸ்மத்துல்லா ஓமர்சாய் 50 லட்சம், உமேஷ் யாதவ் 5.80 கோடி, ஷாருக் கான் 7.40 கோடி, சுஷாந்த் மிஸ்ரா 2.20 கோடி, கார்த்திக் தியாகி 60 லட்சம், மானவ் சுதார் 20 லட்சம், ஸ்பென்சர் ஜான்சன் 10 கோடி மற்றும் ராபின் மின்ஸ் 3.60 கோடி ஆகியோரை வாங்கியது. இதில் முகமது சமி காயம் அடைய தமிழக வேகப்பந்துவீச்சாளர் சந்திப்பு வாரியர் வாங்கப்பட்டு இருக்கிறார். மேலும் ராபின் மின்ஸ் விபத்தில் சிக்கி விளையாட முடியாமல் போக, அவருக்கு பதிலாக கர்நாடகா கேபி சரத் வாங்கப்பட்டு இருக்கிறார்.

இன்று மும்பைக்கு எதிராக நடைபெறும் போட்டியில் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் சுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர் விருதிமான் சகா வருவது உறுதி. மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் சாய் சுதர்சன் மற்றும் டேவிட் மில்லர், ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் ஓமர்சாய் மற்றும் ஷாருக் கான் வருவார்கள்.

ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் ராகுல் திவாட்டியா மற்றும் ரஷீத் கான் இருக்க மீதி மூன்று இடங்களுக்கு, சாய் கிஷோர், உமேஷ் யாதவ், ஜோஸ் லிட்டில் ஆகியோர் வருவார்கள். இம்பேக்ட் பிளேயராக கார்த்திக் தியாகி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் இந்தப் பிளேயிங் லெவனில் இன்னொரு மாற்றம் நடப்பதாக இருந்தால் ஓமர்சாய் இடத்திற்கு ஸ்பென்சர் ஜான்சன் கொண்டு வரப்படலாம். தற்பொழுது ஹர்திக் பாண்டியா மற்றும் முகமது சமி இருவரும் இல்லையென்றாலும் கூட குஜராத் டைட்டன்ஸ் அணி வலிமையாகவே இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஹர்திக் இல்லனு எங்கள தப்பா எடை போடாதிங்க.. 1,20,000 பேர் எங்க மைதானத்தில் இருப்பாங்க – சுப்மன் கில் பேட்டி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான குஜராத் டைட்டன்ஸ் அணியின் வலிமையான உத்தேச பிளேயிங் லெவன் :

சுப்மன் கில், விருதிமான் சகா, சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர், அசமத்துல்லா ஓமர்சாய், ஷாருக் கான், ராகுல் திவாட்டியா, ரஷித் கான், சாய் கிஷோர், உமேஷ் யாதவ் மற்றும் ஜோஸ் லிட்டில். இம்பேக்ட் பிளேயராக கார்த்திக் தியாகி வரலாம். இதில் ஒரு மாற்றமாக அசமத்துல்லா ஓமர்சாய் இடத்திற்கு ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் விளையாடலாம்.