எங்க பாஸ்ட் பவுலர்ஸ் கிட்ட நான் விக்கெட் கீப்பர்னு ஞாபகப்படுத்தனும்.. நாங்க பதட்டமாத்தான் இருந்தோம் – சஞ்சு சாம்சன் பேச்சு

0
2619
Sanju

இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமான பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி ஓவரில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றிக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் நகைச்சுவையாக பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீசியது. ஆடுகளம் மெதுவாக இருந்த காரணத்தினால் பேட்டிங் செய்வது சிரமமாக இருந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஜிதேஷ் சர்மா 24 பந்தில் 29 ரன்கள், அசுடோஸ் சர்மா 16 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 147 ரன்கள் எடுத்தது. கேசவ் மகராஜ் மற்றும் ஆவேஸ் கான் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்கார ஜெய்ஸ்வால் 28 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து கடைசி கட்டத்தில் வந்த ஹெட்மயர் 10 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

இந்தப் போட்டியில் ஆவேஸ் கான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கேட்ச் பிடிக்க சென்ற பொழுது குல்தீப் சென் நடுவில் வந்து பிடித்தார். அடுத்து மீண்டும் ஆவேஸ் கான் வந்து வீட்டில் சஞ்சு சாம்சன் பந்தை பிடிக்க வந்த பொழுது, ஆவேஷ் கானே தவறுதலாக உள்ளே வந்து பந்தை தட்டி விட்டார். இந்த நிகழ்வு இன்றைய போட்டியில் நகைச்சுவையாக அமைந்தது.

வெற்றிக்குப் பின் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் “இப்படி உயரமான கேட்ச் பிடிப்பதில் எங்களுக்கு இந்த ஆண்டு மட்டும் இல்லை கடந்த ஆண்டிலும் நிறையவேடிக்கையான சம்பவங்கள் இருக்கிறது. ஆனால் என்ன ஒன்று எல்லோரும் கண்டு பிடிக்க ஆசைப்படுவதை பார்க்க நன்றாக இருக்கிறது. மைதானம் முழுக்க சத்தமாக இருப்பதால் பந்தை பிடிக்க யார் வருகிறார்கள் என்பது குறித்து எதுவும் கேட்பதில்லை. என் கையில் கிளவுஸ் இருப்பதால் பந்தை நான் பிடிப்பது தான் சுலபமானது என்று என் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களிடம் சொல்ல வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : 6 பந்து 10 ரன்.. பயம் காட்டிய பஞ்சாப்.. சிறப்பாக முடித்த சிம்ரன் ஹெட்மயர்.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

இலக்கைத் துரத்தும் பொழுது நாங்கள் கொஞ்சம் பதற்றம் ஆகவே இருந்தோம். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக போட்டி நெருக்கமாகவே செல்கிறது. பஞ்சாப் அணியினர் நன்றாக பந்து வீசினார்கள். ஹெட்மயர் பல ஆண்டுகளாக போட்டியை முடித்து வருகிறார். இவரும் ரோமன் பவலும் மிகவும் அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தார்கள். தனுஷ் கோட்டியனுக்கு நல்ல ரஞ்சி சீசன் இருந்தது. நாங்கள் எங்கள் பேட்டிங் வரிசையை சீர்குலைக்க விரும்பவில்லை. எனவே அவரை ஓபனராக அனுப்பி விட்டோம். ஜெய்ஸ்வாலுக்கு பேட்டில் இருந்து 30, 40 ரன்கள் கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.