பினிஷராக கலக்கிய தினேஷ் கார்த்திக்.. 10 பந்துகளில் மேஜிக்.. பஞ்சாபை ஆர்சிபி வீழ்த்தி அசத்தல்

0
1079
Virat

இன்று ஐபிஎல் தொடரின் ஆறாவது போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. ஆர்சிபி அணி முதல் சிஎஸ்கே அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ 8(6), பிரப்சிம்ரன் சிங் 25(17), லிவிங்ஸ்டன் 17 (13), கேப்டன் ஷிகர் தவான் 45 (37), சாம் கரன் 23(17), ஜிதேஷ் சர்மா 20 (27) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஒரு கட்டத்தில் பேட்டிங் வரிசையை சரியாக அமைத்திருந்தால் பஞ்சாப் கிங் சனியால் 200 ரண்களையும் எட்ட முடியும் சூழ்நிலை இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் தவறாக வாங்கிய சஷாங்க் சிங் 8 பந்துகளில் அதிரடியாக 21 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணிக்கு வேகப்பந்துவீச்சாளர்கள் யாஸ் தயால் 4 ஓவர்களுக்கு 23 ரன்கள் 2 விக்கெட், முகமது சிராஜ் 4 ஓவர்களுக்கு 26 ரன்கள் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் பாப் டு பிளிசிஸ் 3(7), கேமரூன் கிரீன் 3(5), ரஜத் பட்டிதார் 18(18), மேக்ஸ்வெல் 3(5) என வரிசையாக வெளியேறினார்கள். பூஜ்ஜியத்தில் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பிய விராட் கோலி அதற்கு பிறகு சிறப்பாக விளையாடி 49 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் உடன் 77 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இந்த நிலையில் கடைசி நான்கு ஓவர்களுக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் மற்றும் மகிபால் லோம்ரர் அதிரடியாக விளையாடி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆர்சிபி அணியை வெற்றி பெற வைத்தது. ஆட்டம் இழக்காத இந்த ஜோடியில் தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்கள், மகிபால் லோம்ரர் 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : சூரியகுமார் கிடையாது.. டி20 கிரிக்கெட்டில் இவர்தான் இப்போது சிறந்த பேட்ஸ்மேன் – ஏபி.டிவில்லியர்ஸ் கருத்து

ஆர்சிபி அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஹர்பரித் பிரார் மற்றும் ககிசோ ரபாடா இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். பேட்டிங் ஆர்டரை தவறாக அமைத்ததாலும், கடைசிக்கட்டத்தில் அர்ஸ்தீப் சிங்கை 17 மற்றும் 19ஆவது ஓவர்களுக்கு பயன்படுத்தாமல் 18 மற்றும் 20வது ஓவருக்கு பயன்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கிறது.