சூரியகுமார் கிடையாது.. டி20 கிரிக்கெட்டில் இவர்தான் இப்போது சிறந்த பேட்ஸ்மேன் – ஏபி.டிவில்லியர்ஸ் கருத்து

0
676
Surya

தற்போது டி20 கிரிக்கெட் உலகத்தில் மிகவும் அதிரடியான பேட்ஸ்மேனாக இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் இருக்கிறார். பெரும்பாலும் பவர் பிளே முடிந்து பேட்டிங் செய்ய வரும் அவர் 170 க்கும் மேல் ஸ்டிரைக் ரேட் வைத்திருப்பது சர்வதேச கிரிக்கெட்டில் சாத்தியம் இல்லாத ஒன்று.

இந்த நிலையில் ஒருமுறை ஏபி.டிவில்லியர்ஸ் பேசி இருக்கும் பொழுது சூரிய குமார் யாதவ் தன்னையும் தாண்டி சென்று விட்டார் என்பது போல கூறி இருந்தார். தற்பொழுது ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்து ஐபிஎல் தொடரில் சில போட்டிகளை விளையாட முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெளியில் சூரியகுமார் இருந்து வருகிறார்.

- Advertisement -

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பித்த உடனேயே சுவாரசியத்தின் உச்சத்திற்கு சென்று இருக்கிறது. இரண்டாவது நாளில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டி, ஹை ஸ்கோரிங் போட்டியாகவும் இருந்தது, அதே சமயத்தில் கடைசிப் பந்து வரையில் இரு அணிகளுக்கும் வெற்றிக்கான வாய்ப்பு இருந்தது. எனவே இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பானதாக அமைந்திருந்தது.

முதலில் கொல்கத்தா அணிக்காக ரசல் 25 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் அதிரடியாக 64 ரன்கள் குவித்திருந்தார். இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பொழுது ஹைதராபாத் அணிக்கு ஹென்றி கிளாஸன் 29 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் குவித்து இருந்தார். கடைசி நான்கு ஓவர்களுக்கு 80 ரன்கள் தேவைப்பட்டபோது அவர் வெற்றி பெறும் சாத்தியத்திற்கு ஹைதராபாத்தை கொண்டு சென்றார். கடைசியில் துரதிஷ்டவசமாக கடைசிப் பந்தில் வெல்ல முடியாமல் போனது.

- Advertisement -

இந்த நிலையில் ஏபி.டிவில்லியர்ஸ் இந்த போட்டியை பற்றி பேசும்பொழுது “ஹைதராபாத் அணி தாமதமாக கிளாசனை அனுப்பி அதிகபட்சமாக அவரிடம் இருந்து எதிர்பார்த்தது. ஆனால் தற்போது அவர் இருக்கும் பார்முக்கு அவர்தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருப்பார். அவர் முதல் கியரில் இருந்து உடனடியாக ஐந்தாவது கியருக்கு செல்ல முடிகிறது. இந்த காரணத்திற்காகவே நான் அவரை தற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறுகிறேன்.

இதையும் படிங்க : கேப்டனா ருதுராஜிகிட்ட எதையும் எதிர்பார்க்காதிங்க.. அதுக்கான காரணம் இதுதான் – லட்சுமிபதி பாலாஜி பேச்சு

ஹைதராபாத் அணி பேட்டிங்கில் தாங்கள் ஆரம்பித்த விதத்திற்காக மிகவும் வருத்தப்பட்டு இருப்பார்கள். அவர்கள் கேகேஆர் அணியை மேலும் சிக்கலில் தள்ளி மேற்கொண்டு ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தால் போட்டியை அங்கேயே முடித்து இருப்பார்கள். மேலும் ஈடன் கார்டன் மைதானத்தில் 200 ரன்கள் என்பது சராசரியான ஸ்கோர் என்று நமக்குத் தெரியும். ஆனால் மிக நன்றாக செட்டப் செய்து விளையாடியது அருமையாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -