5 ஓவர் 62 ரன்.. 2 புதுமுக உள்நாட்டு வீரர்கள் கலக்கல்.. பஞ்சாப் கிங்ஸ் சேசிங் சாதனை வெற்றி

0
679
IPL2024

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணிக்கு சகா 11 (13), கேன் வில்லியம்சன் 26 (22) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து வந்த தமிழகத்தின் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி ஆறு பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்த போட்டியிலும் இடம் பெற்ற விஜய் சங்கர் 10 பந்துகளில் 8 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். ஆனால் ஒரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் 48 பந்துகளில் அதிரடியாக 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 89 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து ஃபினிஷர் ராகுல் திவாட்டியா ஆட்டம் இழக்காமல் 8 பந்துகளில் அதிரடியாக 23 ரன்கள் எடுக்க குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. ரபாடா 4 ஓபவர்களில் 43 ரன்கள் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் 1 (2), ஜானி பேர்ஸ்டோ 22 (13), பிரப்சிம்ரன் சிங் 35 (24), சாம் கரன் 5 (8), சிக்கந்தர் ராஸா 15 (16), ஜிதேஷ் ஷர்மா 16 (8) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடைசி ஐந்து ஓவர்களில் வெற்றிக்கு 62 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நேரத்தில் இந்திய உள்நாட்டு வீரர்கள் ஷாசான்ங் சிங் மற்றும் அசுடோஸ் சர்மா இருவரும் களத்தில் இருந்தார்கள். சர்வதேச கிரிக்கெட் அனுபவம் இல்லை என்றாலும் கூட எதைப்பற்றியும் கவலைப்படாமல், மிகச் சிறப்பாக விளையாடி பஞ்சாப் கிங்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : கில் அதிகபட்ச ரன்.. தானாக வெளியேறிய சாய் சுதர்சன்.. குஜராத் டைட்டன்ஸ் ரன் குவிப்பு

அசுடோஸ் சர்மா 17 மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 31 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். கடைசி வரை களத்தில் இருந்த ஷாசான்ங் சிங் 29 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியை வெல்ல வைத்து ஹீரோ ஆனார்.