கில் அதிகபட்ச ரன்.. தானாக வெளியேறிய சாய் சுதர்சன்.. குஜராத் டைட்டன்ஸ் ரன் குவிப்பு

0
282
Ipl2024

இன்று ஐபிஎல் தொடரின் 17ஆவது போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாபின் அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

இந்த போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியின் தரப்பில் டேவிட் மில்லர் காயத்தால் வெளியேறியிருக்க, அவருடைய இடத்திற்கு கேன் வில்லியம்சன் கொண்டுவரப்பட்டார். இதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் காயமடைந்த லிவிங்ஸ்டன் வெளியேற, சிக்கந்தர் ராஸா அவருடைய இடத்திற்கு வந்திருக்கிறார்.

- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 29 ரன்கள் 3 ஓவரில் வந்த நிலையில், சகா 13 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வந்த கேன் வில்லியம்சன் கில் உடன் 42 பார்ட்னர்ஷிப் அமைத்து, 22 பந்தில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகள் இழந்த பிறகு உள்ளே வந்த சாய் சுதர்ஷன் அதிரடியாக விளையாடி ஆறு பவுண்டரிகள் அடித்து, 19 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஹர்சல் படேல் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவிடம் ஆட்டம் இழந்தார். இதற்கு அப்பீல் செய்த அம்பயர் அவுட் தரவில்லை. ஆனால் சாய் சுதர்சனே பந்து பேட்டில் பட்டது என நேர்மையாக வெளியேற, பிறகு அம்பயர் அவுட் கொடுத்தார். இந்த ஜோடி 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அடுத்து விஜய் சங்கர் 10 பந்தில் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்

- Advertisement -

இன்றைய போட்டியில் டேவிட் மில்லர் இல்லாத காரணத்தினால் கேப்டன் கில் பொறுப்பை உணர்ந்து மிகவும் சிறப்பாக விளையாடினார். கடைசி வரை களத்தில் நின்ற கில் 48 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் ஆட்டம் இழக்காமல் 89 ரன்கள் குவித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ரன் இதுதான். ராகுல் திவாட்டியா 8 பந்துகளில் அதிரடியாக 23 ரன்கள் எடுத்தார். கடைசி 10 ஓவர்களில் குஜராத் அணி 116 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க : மயங்க் யாதவுக்கு எதிரா ஹோம் ஒர்க் பண்ணிட்டுதான் வந்தேன்.. ஆனா அவர்கிட்ட இந்த வித்தியாசம் இருக்கு – மேக்ஸ்வெல் பேட்டி

20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு தரப்பில் ரபடா 4 ஓவர்களுக்கு 44 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெறுவது சிஎஸ்கே அணிக்கு புள்ளி பட்டியலில் பிரச்சனைகளை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -