3 கோடி கட்டாததால் கட்டான கரண்ட்.. சிஎஸ்கே ஹைதராபாத் போட்டிக்கு வந்த சிக்கல்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்

0
1286

17 வது ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. இப்போட்டி நடக்கும் ஹைதராபாத் உப்பல் ஸ்டேடியத்தில் மின்சார கட்டணம் செலுத்தப்படாததால், ரத்து ஆகி இருக்க வேண்டிய இப்போட்டி கடைசி நேரத்தில் தப்பித்து இருக்கிறது.

ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 18வது போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் இப்போட்டிக்கு மிக தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றனர். போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில், நேற்று மாலை தெலுங்கானா மாநில மின் விநியோக நிறுவனம் ராஜீவ் காந்தி மைதானத்தில் மின் இணைப்பை துண்டித்து இருக்கிறது.

- Advertisement -

ஏனெனில் தெலுங்கானா சதர்ன் பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்திற்கு அசல் நிலுவைத் தொகை மற்றும் தாமதமாக செலுத்துவதற்கான கூடுதல் கட்டணம் என இரண்டும் சேர்த்து 3.05 கோடி ரூபாய் செலுத்தக் கூறி பிப்ரவரி மாதம் இறுதி அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் இதனை ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேசன் இந்த தொகையை செலுத்த தவறியிருக்கிறது.

மேலும் கூடுதல் கட்டணத்தை தள்ளுபடி செய்யுமாறு தெலுங்கானா மின் இணைப்புக்கு ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேசன் கோரிக்கை விடுத்த போதிலும், தெலுங்கானா மின் இணைப்பு 15 நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரித்து இருக்கிறது. இந்நிலையில் நிலுவைத் தொகையை செலுத்த தவறியதால் நேற்று மாலை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இன்று நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நடைபெறாவிட்டால் ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேசன் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக முடியும். எனவே ஹைதராபாத் நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு குறைந்தபட்சம் பாதி நிலுவைத் தொகையான 1.63 கோடியை உடனடியாக செலுத்துமாறு உத்தரவிட்டது.

ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேசன் இந்த தொகையை செலுத்தியதை தொடர்ந்து மைதானத்துக்கான மின்சாரத்தை மீண்டும் இணைக்குமாறு நீதிமன்றம் மின்சார துறைக்கு உத்தரவிட்டது. மீதமுள்ள தொகையை இரண்டு தவணையாக அதாவது 25 சதவீதத்தை ஏப்ரல் மாத இறுதியிலும், அடுத்த தவணையை மே மாத இருதியிலும் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : சிஎஸ்கேவை காப்பாற்றிய பஞ்சாப் கிங்ஸ்.. புள்ளி பட்டியலில் ஆர்சிபி அணிக்கு தொடரும் சோகம்

எனவே இறுதியில் ரத்தாகி இருக்க வேண்டிய போட்டி, பாதி நிலுவை தொகை செலுத்தப்பட்டதை தொடர்ந்து இன்று நடைபெற இருக்கிற போட்டி எந்தவித சிக்கலும் இல்லாமல் நடைபெறும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே டெல்லி அணியிடம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் தனது வெற்றிப் பாதையை தொடங்க திட்டமிட்டுள்ளது.

- Advertisement -