ஐபிஎல் 2024 : சிஎஸ்கேவை காப்பாற்றிய பஞ்சாப் கிங்ஸ்.. புள்ளி பட்டியலில் ஆர்சிபி அணிக்கு தொடரும் சோகம்

0
116

இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபலமான ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணி குஜராத் அணியை வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது.

குஜராத் அணியில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் கில் 48 பந்துகளில் ஆறு பவுண்டரி, நான்கு சிக்ஸர்களுடன் 89 ரன்கள் குவித்தார். அதற்கு பின்னர் தமிழக வீரர் சாய் சுதர்சன் 19 பந்துகளில் ஆறு பவுண்டரிகளுடன் 33 ரன்கள் குவித்தார். இதனால் குஜராத் அணி 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்திலேயே முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்ததால் சிக்கலில் தவித்த பஞ்சாப் அணியை அனுபவமே இல்லாத இளம் வீரர்கள் ஆன சஷாங்க் சிங் மற்றும் அசுடோஸ் சர்மா ஆகியோர் மீட்டெடுத்தனர்.

- Advertisement -

அனுபவம் இல்லாத இளம் வீரரான சசாங்க் சிங் குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் நிலையில் இருந்த குஜராத் அணியை தனது அபார பேட்டிங் மூலம் வெற்றியை பஞ்சாப் அணிக்கு பெற்றுக் கொடுத்தார். வெறும் 29 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட இவர் 6 பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் என 61 ரன்கள் விளாசினார்.

இவருடன் பாட்னர்ஷிப் அமைத்த மற்றொரு வீரரான அசுடோஸ் சர்மா 19 பந்துகளை எதிர் கொண்டு மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 31 ரன்கள் விளாசினார். 61 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சஷாங்க் சிங் பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்ததன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இதன்மூலம் பஞ்சாப் அணி நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டியில் வெற்றி, இரண்டு போட்டியில் தோல்வி என புள்ளி பட்டியலில் தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

ஐபிஎல் 2024 புள்ளி பட்டியல்

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பஞ்சாப் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை காப்பாற்றி இருக்கிறது. நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகள், இரண்டு தோல்விகள் என புள்ளி பட்டியலில் தற்போது ஆறாவது இடத்தில் இருக்கும் குஜராத் அணி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் மூன்று வெற்றிகள் உடன் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும். ஏற்கனவே இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள சென்னை அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு சென்று இருக்கும்.

- Advertisement -

இதனால் பஞ்சாப் அணி சென்னை அணிக்கு நன்மையை உண்டாக்கியிருக்கிறது. மேலும் இந்த தொடரில் வலுவான அணியான பெங்களூர் அணி நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, மூன்று தோல்வி என புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது.

இதையும் படிங்க:ஐபிஎல் ஏலத்தில் தவறாக வாங்கப்பட்டவர்.. பஞ்சாப் கிங்சுக்கு தனியாளாக வெற்றி பெற்று தந்த கதை.. என்ன நடந்தது?

மற்றொரு வலுவான அணியான ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தான் எதிர்கொண்ட மூன்று போட்டியிலும் தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்திற்குச் சென்று பரிதாப நிலையில் இருக்கிறது. இனி மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற, இனி வரும் அனைத்து போட்டிகளிலும் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெறுவது அவசியமாகும்.