ஐபிஎல் 2024 பாயிண்ட்ஸ் டேபிள்: 10வது இடத்தில் ஆர்சிபி.. சிஎஸ்கேக்கு உதவிய டெல்லி.. ஏறி வந்த மும்பை இந்தியன்ஸ்

0
399
IPL2024

இன்று ஐபிஎல் தொடரில் லக்னோ மைதானத்தில் லக்னோ அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. டெல்லி அணி பெற்ற இந்த வெற்றியால் புள்ளிப் பட்டியலில் சில குறிப்பிட்ட தகுந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பாக சிஎஸ்கே அணிக்கு நல்ல விஷயமாக டெல்லி அணியின் வெற்றி அமைந்திருக்கிறது.

இந்த போட்டிக்கு முன்பாக நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகள் உடன் 6 புள்ளிகள் எடுத்து புள்ளிப் பட்டியலில் லக்னோ அணி மூன்றாவது இடத்தில் இருந்தது. டெல்லி அணி 5 போட்டிகளில் நான்கு போட்டிகளை தோற்று, ஒரு போட்டியை மட்டுமே வென்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இன்று டெல்லி அணி லக்னோ அணியை வென்றதின் மூலமாக, லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் ரன் ரேட் கொஞ்சம் குறைய, மூன்றாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு சரிந்தது. நான்காவது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி ரன் ரேட் அடிப்படையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

அதே சமயத்தில் ஆறாவது போட்டியில் இரண்டாவது வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் உடன் டெல்லி அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியது. இதேபோல் ஆறு போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளை தோற்று, ஒரு போட்டியை மட்டுமே வென்ற ஆர்சிபி அணி பரிதாபமாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணி முதல் மூன்று போட்டிகளை தோற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அந்த அணி கடைசி இரண்டு போட்டிகளை வென்று, ஐந்து போட்டிகளில் நான்கு புள்ளிகளை பெற்று, ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் மேல் ஏழாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : அந்த பையன பாக்கனும்.. தோனி ஆர்டர்.. இன்னொரு குட்டி மலிங்காவை தூக்கி வந்த சிஎஸ்கே

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐந்து போட்டி, நான்கு வெற்றி, 8 புள்ளிகள் உடன் முதல் இடத்திலும், கே கே ஆர் 4 போட்டிகளில், மூன்று வெற்றிகள், 6 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. சிஎஸ்கே ஐந்து போட்டிகளில், மூன்று வெற்றிகள், 6 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஐந்து போட்டிகள், மூன்று வெற்றிகள், 6 புள்ளிகள் உடன் நான்காவது இடத்திலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.