எதுக்கு ஜெய்ஸ்வால் கில்.. டி20 உலக கோப்பையில் இவங்கதான் இந்தியாவுக்கு ஓபன் பண்ணனும் – கங்குலி கருத்து

0
76
Ganguly

இந்தியாவில் நடைபெற்று வரும் 17ஆவது ஐபிஎல் சீசன் தற்போது பாதி நிலையை கடந்திருக்கிறது. மே 26 ஆம் தேதியுடன் முழுவதுமாக முடிவடைகிறது. இதற்கு அடுத்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கிறது. இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஐபிஎல் தொடருக்கு முன்பாக இந்தியாவில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு, இந்திய டி20 அணிக்கு 14 மாதங்கள் கழித்து மூத்த வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அழைக்கப்பட்டார்கள். இதன் மூலமாக இவர்கள் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது.

- Advertisement -

மேலும் மூத்த இரண்டு வீரர்கள் அணிக்குள் வந்திருப்பதால், வாய்ப்பை இழக்கப் போகும் இரண்டு இளம் வீரர்கள் யார்? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. மேலும் விக்கெட் கீப்பர்கள் யார்? என்பதும் டி20 உலகக் கோப்பை இந்திய அணியை அமைப்பதில் மிகவும் குழப்பத்தை தரக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.

தற்போது இந்திய டி20 அணியில் ரிங்கு சிங், சிவம் துபே, திலக் வர்மா போன்ற இளம் பேட்ஸ்மேன்கள் மிடில் ஆர்டருக்குள் வரவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதே சமயத்தில் துவக்க ஆட்டக்காரர்களாக இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், கில் மற்றும் ருதுராஜ் ஆகியோர் இருக்கிறார்கள். எனவே டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு மிகவும் கடினமானதாக இருக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக யார் இருக்க வேண்டும் என பேசிய கங்குலி கூறும் பொழுது ” ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவுக்கு செல்வார்கள். ஆனால் நீங்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால், இவர்கள் இருவருமே இந்திய அணியின் ஓபனர்களாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : அவர்கிட்ட அது சம்பந்தமா 10-15 நிமிஷம் தான் பேசினேன்.. அதிசயமானது ஆனா பதட்டமானது – ரியான் பராக் பேட்டி

மேலும் டி20 உலகக்கோப்பையில் நிச்சயமாக ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருக்க வேண்டும். அதேபோல விராட் கோலி மிகவும் சிறந்த வீரர். எனவே 220 உலக கோப்பைக்கு இடைப்பட்ட இந்த காலத்தில் தவறாக எதுவும் நடந்து விடாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -