திலக் வர்மா மேல தப்பு இல்ல.. நாங்க தோத்ததுக்கு காரணம் இதுதான் – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
864
Hardik

இன்று இந்த வருடம் ஐபிஎல் தொடரில் நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் இருந்து மும்பை சென்று விளையாடுவதால் இந்த போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளித்து ரன்கள் எடுக்க சிரமப்பட்டது. 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன் 39 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பும்ரா மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஐந்து ஓவர்களுக்கு 43 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரஷீத் கான் மற்றும் மோகித் சர்மா இருவரும் சிறப்பாக பந்துவீசி மும்பை இந்தியன்ஸ் அணியை கட்டுப்படுத்தி வந்தார்கள்.

இதற்கு அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை வீசிய பென்சர் ஜான்சன் எட்டு ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து திலக் வருமா மற்றும் ஜெரால்ட் கோட்சி என இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதற்கு முன்பு ரஷித் கான் ஓவரில் திலக் வருமா அடுத்த பந்து சிங்கிள் ரன் எடுக்க சென்ற பொழுது, திலக் வர்மா அந்த ரன்னை எடுக்காமல், தானே ரஷித் கான் ஓவரை அடிப்பதாக டிம் டேவிட்டை அப்படியே நிற்க சொல்லி விட்டார். அந்த ஓவரில் மூன்று ரன் மட்டுமே வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், உமேஷ் யாதவ் முதல் இரண்டு பந்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு 10 ரன்கள் தந்தாலும், அடுத்த இரண்டு பந்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் பியூஸ் சாவ்லா விக்கெட்டை வீழ்த்தி, மேற்கொண்டு இரண்டு ரன் மட்டுமே தந்து, மும்பை இந்தியன்ஸ் அணியை ஆறு ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்த முக்கிய பங்களிப்பை செய்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல்-ல் 12 ஆண்டுகளாக மும்பைக்கு தீராத சோகம்.. கடைசி 5 ஓவரில் திரில்.. குஜராத் அபார வெற்றி

போட்டியின் முடிவுக்கு பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா “நாங்கள் கடைசியாக இந்த ஓவர்களுக்கு அந்த 42 ரன்களை துரத்த முடியும் என்று நம்பினோம். கடைசி ஐந்து ஓவர்களுக்கு குறைவான ரன்களை அடிக்க முடியாத நாளில் இதுவும் ஒன்றாக அமைந்து விட்டது. அந்த இடத்தில் நாங்கள் எங்களுடைய மொமன்டத்தை இழந்து விட்டோம். இந்த மைதானத்திற்கு திரும்ப வருவது மிகவும் மகிழ்ச்சியாகும். ஏனென்றால் இங்கு அட்மாஸ்பியர் மிகவும் கலகலப்பாக இருக்கும். திலக் வர்மா அந்த ஒரு ரன்னை எடுக்காதது தவறு கிடையாது. அவரையும் அவர் செய்ததையும் நான் ஆதரிக்கிறேன். அதுசிறந்த யோசனை என்று நினைக்கிறேன். இது பிரச்சனை கிடையாது இன்னும் 13 ஆட்டங்கள் இருக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.