15.4 ஓவர்.. பில் சால்ட் காட்டடி.. ஐபிஎல் வரலாற்றில் தனி சாதனை.. லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா..

0
166
KKR

இன்று ஐபிஎல் தொடரில் 28வது போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை மிக எளிதாக வீழ்த்தி இருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாசியில் வெற்றி பெற்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். லக்னோ அணிக்கு குயின்டன் டி காக் 10 (8), தீபக் ஹூடா 8 (10, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 10 (5) சொற்ப ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதனால் லக்னோ அணி ஆரம்பத்திலேயே ரன் அழுத்தத்தில் சிக்கியது.

- Advertisement -

கேப்டன் கேஎல்ராகுல் 39 (27), ஆயுஸ் பதோனி 29 (27), கடைசி கட்டத்தில் நிக்கோலஸ் பூரன் 45 (32) ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில் லக்னோ அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த முறை கொல்கத்தா அணிக்கு அதிக விலைக்கு வாங்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க் 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த முறை சுனில் நரைன் 6 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே வெளியேறினார். அடுத்து வந்த ரகுவன்சி 6 பந்தில் 7 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சேர்ந்து மிகச் சிறப்பாக விளையாடினார்கள். இந்த ஜோடி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 76 பந்துகளில் 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. பில் சால்ட் 47 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 89 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 38 பந்துகளில் 38 ரன்கள் எடுக்க, கொல்கத்தா அணி 15.4 நான்கு ஓவர்களில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வென்றது. லக்னோ அணியின் தரப்பில் மோசின் கான் நான்கு ஓவர்களில் 29 ரன்கள் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க : 1 பந்துக்கு 14 ரன் கொடுத்த ஷாமர் ஜோசப்.. முதல் ஐபிஎல் போட்டியிலே வினோத சோகமான சம்பவம்

இந்த போட்டியில் மூன்றாவது விக்கெட்டுக்கு கொல்கத்தா அணி அமைத்த 120 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான், ஐபிஎல் வரலாற்றில் அந்த அணிக்கு அதிகபட்ச மூன்றாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. மேலும் ஐந்தாவது போட்டியில் விளையாடி நான்கு வெற்றிகள் உடன் புள்ளி பட்டியலில் பலமாக இரண்டாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.