6,6,6,6,6.. கெயிலை தாண்டி பூரன் மிரட்டல் சாதனை.. ஆர்சிபி செஞ்ச ஒரே தவறு 5 சிக்ஸர்.. லக்னோ ரன் குவிப்பு

0
813
Pooran

இன்று ஐபிஎல் தொடரின் 15ஆவது போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதிக் கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இன்றைய போட்டிக்கான அரசியல் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அந்த அணியில் அல்ஜாரி ஜோசப் நீக்கப்பட்டு, அவருடைய இடத்துக்கு இங்கிலாந்தின் ரீஸ் டாப்லி கொண்டுவரப்பட்டார். லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் காயம் காரணமாக மோசின் கான் விளையாட முடியாமல் போக யாஸ் தாகூர் இடம் பெற்றிருக்கிறார்.

- Advertisement -

லக்னோ அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் வந்தது. அந்த அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் 14 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து வந்த படிக்கல் 11 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து குயின்டன் டி காக் உடன் இணைந்த மார்க்கஸ் ஸ்டாய்னிஷ் 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடிய குயிண்டன் டி காக் அரை சதம் அடித்து 56 பந்துகளில் 8 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் எடுத்து டாப்லி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதே ஓவரில் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் போறன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத் தவறவிட்டார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திய நிக்கோலஸ் போறேன் தொடர்ச்சியாக டாப்லி பந்து வீச்சில் 19ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்தார். இதற்கு அடுத்து சிராஜ் வீசிய 20வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்தால். சுலபமான கேட்ச் வாய்ப்பை ஆர்சிபி கோட்டை விட, அதற்கு விலையாக நிக்கோலஸ் பூரன் ஐந்து சித்தர்கள் உடன் 21 பந்தில் ஆட்டம் இழக்காமல் 40 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : மனோஜ் திவாரி ஹர்திக் பாண்டியா விஷயத்தில் அவசரப்பட்டு வாய் விடக் கூடாது – சேவாக் எதிர்ப்பு

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணியின் தரப்பில் மேக்ஸ்வெல் நான்கு ஓவர்களுக்கு 23 ரன்கள் தந்து இரண்டு விக்கெட்டுகள், யாஸ் தயால் நான்கு ஓவர்களுக்கு 24 ரன்கள் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். இந்த போட்டியில் 5 சிக்ஸர்கள் அடித்ததின் மூலம் ஐபிஎல் தொடரில் 100 பூரன் தாண்டி இருக்கிறார். மேலும் 100 சிக்ஸர்களுக்கு மேல் ஐபிஎல் தொடரில் அடித்தவர்களில் பூரன் 8.6 பந்துகளுக்கு ஒருமுறை சிக்ஸ் அடிக்கும் விகிதத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். கெயில் 9.3 பந்துகள் விகிதத்துடன் மூன்றாவது இடத்திற்கு இறங்கி இருக்கிறார். முதல் இடத்தில் ரசல் 6.6 பந்துகளுக்கு ஒரு முறை ஐபிஎல் தொடரில் சிக்சர் அடிப்பவராக இருக்கிறார்.