மனோஜ் திவாரி ஹர்திக் பாண்டியா விஷயத்தில் அவசரப்பட்டு வாய் விடக் கூடாது – சேவாக் எதிர்ப்பு

0
174
Sehwag

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா எட்டு வருடங்களில் ஐந்து முறை கேப்டனாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்திருக்கிறார். மொத்தம் பத்து வருடம் கேப்டன் பொறுப்பில் இருந்த அவர் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தால் நீக்கப்பட்டார்.

இந்த இடத்திற்கு இந்த வருடம் டிரேடிங் செய்து கொண்டுவரப்பட்ட ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி நியமித்தது. இது அணி வீரர்களிடையேவும் அணி ரசிகர்களிடமும் மிகப்பெரிய அதிருப்தியை கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக ரசிகர்கள் வெளியில் இருந்து தங்களுடைய கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களிடையே நல்ல இணக்கம் இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் காலத்தில் நல்ல ஒற்றுமையுடன் செயல்பட என்ன முயற்சி செய்தாலும், அதன் வெளிப்பாடு சிறப்பானதாக வரவில்லை. வீரர்கள் குழப்பமான மற்றும் நெகட்டிவ்வான மனநிலையில் இருப்பதால் தொடர்ந்து மூன்று தோல்விகளை அந்த அணி சந்தித்து இருக்கிறது.

முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடைசி 5 ஓவர்களில் 43 ரன் எடுக்க முடியாமல் தோற்றது. இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 277 ரன்கள் பந்துவீச்சில் விட்டு தந்து மோசமான பந்துவீச்சை ஐபிஎல் தொடரில் பதிவு செய்தது. இதற்கு அடுத்து நேற்று சொந்த மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 125 ரன்ளில் சுருண்டது.

இதன் காரணமாக ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை மீண்டும் கேப்டனாக கொண்டு வர வேண்டுமென குரல்கள் எழுந்திருக்கின்றன. இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி வெளிப்படையாகவே இந்த கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 22 வயசுல ரியான் பராக் பேட்டிங்ல என்னென்ன விஷயம் இருக்கு தெரியுமா? மிரண்டு போயிட்டேன் – ஷேன் வாட்சன் பேட்டி

இதுகுறித்து வீரேந்திர சேவாக் இடம் கேட்ட பொழுது ” ஹர்திக் பாண்டியாவை பற்றி மனோஜ் திவாரி கொஞ்சம் அவசரப்பட்டு பேசி விட்டார் என்று நினைக்கிறேன். ரோஹித் கேப்டன் பொறுப்பில் இருந்த பொழுது கூட அந்த அணி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோற்று சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது. இப்பொழுது கொஞ்சம் பொறுமை காட்ட வேண்டும். ஹர்திக் பாண்டியாவுக்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். இன்னும் இரண்டு மூன்று போட்டிகள் காத்திருந்து இதற்கான கருத்தை தெரிவிக்கலாம்” எனக் கூறியிருக்கிறார்.