வெறும் 39 பந்து 85 ரன்.. கிரிக்கெட்டே பேட்டிங்தாங்க.. எனக்கு இது சந்தோசம்தான் – சுனில் நரைன் பேட்டி

0
391
Narine

ஐபிஎல் 17ஆவது சீசனில் டெல்லி கேப்பிட்டல் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், கொல்கத்தா அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றது. இந்த போட்டியில் 39 பந்துகளில் 85 ரன்கள் குவித்த சுனில் நரைன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லக்னோ அணியின் மென்டர் பொறுப்பில் இருந்து விலகி, கொல்கத்தா அணியின் மென்டர் பொறுப்புக்கு கவுதம் கம்பீர் வந்ததிலிருந்து அணியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக சில வருடங்கள் கழித்து சுனில் நரைனை மீண்டும் துவக்க ஆட்டக்காரராக அவர் கொண்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சுனில் நரை ரன்கள் எடுக்க வில்லை என்றாலும் கூட, கம்பீர தன் முடிவை மாற்றாமல் ஆர்சிபி மற்றும் இன்று டெல்லி அணிக்கு எதிராக சுனில் நரைனை துவக்க ஆட்டக்காரராக அனுப்பி, இரண்டு போட்டிகளையும் தனியாளாக அவரையே வெல்ல வைத்திருக்கிறார்.

மேலும் சவுதி டி20 லீக்கில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியிலும் சுனில் நரைன் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் அவருக்கு கீப்பிங் கேட்ச் இருந்த போதும் ரிஷப் பண்ட் ரிவ்யூ எடுக்காமல் விட்டது, டெல்லி அணியை போட்டியில் இருந்தே வெளியேற்றி விட்டது. அந்த வாய்ப்பிலிருந்து வெளிவந்த சுனில் நரைன் அதற்குப்பின் அதிரடியில் மிரட்டி விட்டார்.

தற்பொழுது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணி மிகவும் பலமான அணியாக கருதப்பட்டது. அவர்கள் எந்த அளவிற்கு பலமான அணியாக கணிக்கப்பட்டார்களோ, தற்பொழுது அந்த அளவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான் இருந்து வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளையும் வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : சத்தத்தால சுனில் நரைன தப்பிக்க விட்டுட்டோம்.. நாங்க ஆல் அவுட் ஆனதே நல்லது – ரிஷப் பண்ட் பேட்டி

ஆட்டநாயகன் விருது பெற்ற சுனில் நரைன் பேசும் பொழுது “கிரிக்கெட் என்பதே பேட்டிங்கை பற்றியதுதான். எனவே பேட்டிங்கில் பங்களிப்பு செய்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயத்தில் நான் பந்து வீச்சையும் ரசித்து செய்து வருகிறேன். அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியில் நிறைய பேட்ஸ்மாங்கில் இருக்கின்ற காரணத்தினால் நான் ஓபனராக வருவதில்லை. இது அணியின் தேவையை பற்றியது. பில் சால்ட் ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர். எனவே என் மீது அழுத்தம் இருப்பதில்லை. இப்படி ஒரு பேட்டிங் ஆடுகளத்தில் அதிக ரன் வித்தியாசத்தில் வெல்ல நினைப்போம். அதை ஒரு அணியாக சேர்ந்து செய்ததில் மகிழ்ச்சி” என்று கூறி இருக்கிறார்.