சத்தத்தால சுனில் நரைன தப்பிக்க விட்டுட்டோம்.. நாங்க ஆல் அவுட் ஆனதே நல்லது – ரிஷப் பண்ட் பேட்டி

0
2344
Pant

இன்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, மூன்று போட்டிகளில் மூன்று வெற்றிகள் உடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்திருக்கிறது. சுனில் நரைனுக்கு ரிஷப் பண்ட் ரிவ்யூ கேட்காதது, இந்த போட்டியில் பெரிய பின்னடைவை அவர்களுக்கு உருவாக்கி இருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 272 ரன்கள் குவித்தது. இதற்கு சுனில் நரை 39 பந்துகளில் அதிரடியாக 85 ரன்கள் குவித்தது முக்கிய காரணமாக அமைந்தது. அவர் இரட்டை இலக்கத்தின் ரன்கள் எடுப்பதற்கு முன்பாகவே, அவருக்கு இஷாந்த் சர்மா பந்துவீச்சில் எட்ஜ் எடுத்து ரிஷப் பண்ட் அதை கேட்ச் பிடித்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் மார்ஸ் சத்தம் கேட்டதாகவும் ரிவ்யூ கேட்கலாம் என்றும் கூறினார். கடைசியில் ரிஷப் பண்ட் ரிவ்யூ சென்ற பொழுது, கள நடுவர் நேரம் முடிந்து விட்டது எனவே ரிவ்யூ ஏற்கப்படாது எனக் கூறிவிட்டார். அதே சமயத்தில் டைம் காட்டும் ஸ்கிரீனில் ஏதோ பிரச்சனை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது கடைசியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குதான் பெரிய பிரச்சினையாக முடிந்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்தப் போட்டியில் 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 25 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். அதே சமயத்தில் நான்காவது போட்டியில் விளையாடிய டெல்லி அணிக்கு இது மூன்றாவது தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தோல்விக்கு பின் பேசிய டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் “எங்களுடைய பந்துவீச்சாளர்கள் இன்று எல்லா இடங்களிலும் இருந்தார்கள். இன்று எங்களுக்கு ஒரு கடினமான நாளாக அமைந்து விட்டது. மைதானத்தில் சத்தம் அதிகமாக இருந்த காரணத்தினால் சுனில் நரைனுக்கு பேட்டில் பட்டது சரியாக கேட்கவில்லை. அதே சமயத்தில் டைமரும் சரியாக வேலை செய்யவில்லை. ஸ்கிரீனில் என்ன டைம் சென்றது என்று தெளிவாகத் தெரியவும் இல்லை. உங்கள் கையில் இருக்கும் விஷயத்தைதான் கட்டுப்படுத்த முடியும். இதையெல்லாம் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

- Advertisement -

இதையும் படிங்க : 17.2 ஓவர்.. 106 ரன் வித்தியாசம்.. டெல்லி அணியை ஓடவிட்ட கொல்கத்தா.. புள்ளி பட்டியலில் மாஸ்

இவ்வளவு பெரிய இலக்கைத் துரத்தும் பொழுது, போராடி ஆல் அவுட் ஆவதே நல்லது. இன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் விருப்பம் எனக்கு இல்லை. இதன் காரணமாகத்தான் அக்சர் படேலுக்கு ஒரு ஓவருடன் நிறுத்திக் கொண்டேன். எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் மூவ்மெண்ட் கிடைத்தது. ஒரு தனிமனிதனாக நான் சிந்திக்க வேண்டிய நேரம் இது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு நாங்கள் சீக்கிரத்தில் மீண்டு வர வேண்டும். எனக்கு உடல்நிலை மிகவும் நன்றாக இருக்கிறது. நான் ஒவ்வொரு நாளையும் அனுபவிக்கிறேன். அதே சமயத்தில் கிரிக்கெட்டுக்கு என ஏற்றத்தாழ்வுகள் உண்டு” எனக் கூறியிருக்கிறார்.