தல தோனிக்கு சுட்டிக் குழந்தை சாம் கரன் செய்த காரியம்.. பிரமித்து போய் புகழும் ரசிகர்கள்

0
3240
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் முக்கியமான போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் தோனிக்காக செய்த ஒரு காரியம் எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இன்றைய போட்டியிலும் ருதுராஜ் டாஸ் தோற்க, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. சிஎஸ்கே அணிக்கு சில போட்டிகளாக தொடர்ந்து துவக்க ஆட்டக்காரராக வரும் ரகானே 24 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து சிவம் துபே ரன் ஏதும் இல்லாமலும், ரவீந்திர ஜடேஜா நான்கு பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இந்த போட்டியில் சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் பந்து நன்றாக சீம் ஆனது. அதே சமயத்தில் பந்து நன்றாக திரும்பவும் செய்தது. இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் ஹர்பரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் இருவரும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். எனவே சிஎஸ்கே அணியின் ரன் வேகம் குறைந்தது.

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சை எதிர்கொண்டு பொறுமையாக விளையாடி, பின்பு மீண்டும் வேகப்பந்து வீச்சு வந்ததும் கொஞ்சம் அதிரடி காட்டி சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் 48 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் மூன்று ஓவர்கள் தொடர்ச்சியாக வீசி இருந்த ராகுல் சாஹரை அவருடைய கடைசி ஓவருக்கு, ஆட்டத்தின் 14 வது ஓவரில் பஞ்சாப் கேப்டன் சாம் கரன் கொண்டு வரவில்லை. சிறப்பாக பந்து வீசிய அவரை தொடர்ந்து பந்து வீச வைக்காதது குறித்து கிரிக்கெட் வர்ணனையில் இருந்தவர்கள், சாம் கரன் மீது விமர்சனங்களை முன்வைத்த படி வந்தார்கள்.

இதையும் படிங்க : 2 ரன் ஓடிய டேரில் மிட்சல் .. ஒரு ரன்னும் ஓடாத தல தோனி.. இதுவரை யாரும் பார்க்காத நிகழ்வு.. களத்தில் என்ன நடந்தது?

இந்த நிலையில் தோனி பேட்டிங் செய்ய உள்ளே வந்ததும், ஒரு ஓவரை நிறுத்தி வைத்திருந்த ராகுல் சாஹரை 19ஆவது ஓவருக்கு பஞ்சாப் கேப்டன் சாம் கரன் கொண்டு வந்தார். பொதுவாக தோனி லெக் ஸ்பின்னர்களுக்கு தடுமாற்றமாக விளையாடுவார். இதை உணர்ந்து தோனிக்காகவே லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹரை சாம் கரன் கொண்டு வந்திருக்கிறார். அந்த ஓவரில் மொத்தம் இரண்டு ரன்கள் மட்டுமே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டோனி நான்கு பந்தில் இரண்டு ரன் மட்டுமே அந்த ஓவரில் எடுத்தார். சாம் கரனின் புத்திசாலித்தனமான இந்த நகர்வை சமூக வலைதளத்தில் பல ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -