மயங்க் யாதவுக்கு எதிரா ஹோம் ஒர்க் பண்ணிட்டுதான் வந்தேன்.. ஆனா அவர்கிட்ட இந்த வித்தியாசம் இருக்கு – மேக்ஸ்வெல் பேட்டி

0
40
Mayank

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில், லக்னோ அணிக்கு அறிமுகமான இளம் வேகபந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அதிவேக பந்து வீச்சால் லக்னோ அணியை தனி ஒரு வீரராக வெல்ல வைத்தார். இதற்கு அடுத்து நடந்த ஆர்சிபி-க்கு எதிரான போட்டியிலும் அதேபோல சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி லக்னோ அணியை வெல்ல வைத்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவன் போன்ற உலகத்தரமான பேட்ஸ்மேன்களை மிகவும் தடுமாற வைத்தார். அதிவேகப்பந்துவீச்சில் அவர் வெளிப்படுத்திய கட்டுப்பாடு, பேட்மேன் மிகவும் திணறடித்தது. அவர்களால் பந்தின் வேகத்தை பயன்படுத்தி விளையாட முடியவில்லை.

- Advertisement -

இதேபோல ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கிளன் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ரஜத் பட்டிதார் என தரமான பேட்ஸ்மேன்களை தனது வேகத்தால் வீழ்த்தினார். அவரது திறமையான வேகத்தை புரிந்து கொள்ளாமல், அவரை அட்டாக் செய்து விளையாட சென்ற எல்லோருமே ஆட்டம் இழந்து இருக்கிறார்கள்.

இதன் காரணமாக அவரை எப்படி விளையாடுவது என்று எதிரணிகள் திட்டம் தீட்ட ஆரம்பித்து விட்டார்கள். இதில் ஒருபடி முன்பே கிளன் மேக்ஸ்வெல் மயங்க் யாதவுக்கு எதிராக எப்படி விளையாடுவது என்று பஞ்சாப் கிங்ஸ் ஆட்டத்தை பார்த்து பயிற்சி செய்திருக்கிறார். ஆனாலும் அவர் செய்த ஹோம் ஒர்க் பலன் அளிக்கவில்லை.

இது குறித்து கிளன் மேக்ஸ்வெல் கூறும்பொழுது ” அவரது பந்துவீச்சு மிகவும் சுவாரசியமாக இருப்பதாக நான் நினைத்தேன். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களில் சிலரை அவர் தனது வேகத்தால் மிகவும் அவசரப்படுத்தினார். இதன் காரணமாக அவருக்கு எதிராக விளையாடுவதற்கு நான் கொஞ்சம் ஹோம் ஒர்க் செய்தேன். ஆனால் அவர் கையில் இருந்து பந்து வெளியேறும் நேரத்தில், லென்த்தை பிக்கப் செய்யும்போது ஹோம் வொர்க் செய்தது உதவவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் வந்ததில் மகிழ்ச்சி.. ஆனா அவர் பேட்டிங் செய்யற முறை எனக்கு திருப்தி இல்ல – சேவாக் பேட்டி

இந்த நேரத்தில் உலக கிரிக்கெட்டில் பார்க்க முடியாத வேகம் அவரிடம் இருக்கிறது. தற்பொழுது சில பந்துவீச்சாளர்கள் மணிக்கு தொடர்ந்து 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதை நாம் பார்க்கிறோம். ஆனால் உங்கள் ஆயுத களஞ்சியத்தில் 150 கிலோ மீட்டர் வேகமான பந்து இருக்கிறது என்றால் அது மிகவும் வலிமையான ஒன்று” எனக் கூறியிருக்கிறார்.