எங்க திட்டமே இதுதான்.. கரெக்டா வந்து வலையில விழுந்தாங்க.. இது ரொம்ப ஸ்பெஷல் – சுப்மன் கில் பேட்டி

0
557
Gill

இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி தனது சொந்த மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடியது. தங்கள் அணியை விட்டு சென்ற கேப்டன், தங்கள் அணிக்கு எதிராக வந்து விளையாடுவதால் குஜராத் ரசிகர்கள் இந்த போட்டிக்காக காத்திருந்தார்கள். எனவே ஐபிஎல் தொடரிலும் இந்த போட்டிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்தான். அவர் இன்றைய போட்டியில் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க, மூன்றாவது இடத்தில் வந்த சாய் சுதர்சன் 39 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தரப்பில் பும்ரா மிகச் சிறப்பாக பந்துவீசி 14 ரன் மட்டுமே விட்டு தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 29 பந்தில் 43 ரன்கள், டிவால்ட் பிரிவியஸ் 38 பந்தில் 46 ரன்கள் எடுத்து வெற்றிக்கான நல்ல அடித்தளத்தை அமைத்து தந்தார்கள். கடைசி ஐந்து ஓவர்களுக்கு ஆறு விக்கெட் கைவசம் இருக்கும் பொழுது 43 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டது. எப்படியும் மும்பை இந்தியன்ஸ் அணிதான் வெல்லும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள்.

இப்படியான நிலையில் டிம் டேவிட், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஜெரால்ட் கோட்சி என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது, யாருமே எதிர்பார்க்காத வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தங்கள் சொந்த மைதானத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது, அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில் வெற்றியுடன் தன் கேப்டன் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்.

வெற்றிக்குப் பின் பேசிய சுப்மன் கில் “எங்கள் அணியின் வீரர்கள் பதட்டத்தை அடக்கிய விதம், கடைசிக் கட்டத்தில் நாங்கள் பந்து வீசிய விதம், குறிப்பாக பனிப்பொழிவு வந்த பின்னால் எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் செயல்பட்டது இவையெல்லாம் சேர்ந்துதான் எங்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. இது பேட்மின்கள் மீது அழுத்தத்தை கொடுப்பது சம்பந்தப்பட்டது. பனிப்பொழிவு இருந்த நிலையில் எங்களுடைய வீரர்கள் இந்த அளவுக்கு செயல்பட்டு இருப்பதுதான் இதை மிகவும் ஸ்பெஷல் ஆக்குகிறது.

- Advertisement -

இதையும் படிங்க: திலக் வர்மா மேல தப்பு இல்ல.. நாங்க தோத்ததுக்கு காரணம் இதுதான் – ஹர்திக் பாண்டியா பேட்டி

மோகித் சர்மா எங்கள் அணியுடன் வந்து இணைந்ததிலிருந்து அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதேபோல் அழுத்தத்தில் அவர் தொடர்ந்து மிகச்சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். எதிரணிக்கு அழுத்தத்தை உருவாக்கி, அவர்கள் தவறு செய்யும் வரை காத்திருப்பதுதான் எங்களுடைய திட்டமாக இருந்தது. நாங்கள் அதற்கு ஏற்றபடி அழுத்தத்தை உருவாக்கினோம். இங்க 170 நல்ல ஸ்கோர் என்று நினைத்தேன். ஆனால் 10 முதல் 15 ரன்கள் குறைவாக இருந்தது. இங்கு வந்து தேய்ந்த பின்னால் ஆடுகளம் எதுவாக இருப்பதால் அடிப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.