யாருனே தெரியாதவங்க வந்து எங்களை முடிச்சு விட்டுட்டாங்க.. தோல்விக்கு வேற ஒரு காரணம் இருக்கு – சுப்மன் கில் பேட்டி

0
319
Gill

இன்று ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பரபரப்பான முறையில் பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி இருக்கிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று பந்துவீசிய பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 20 ஓவர்களில் 199 ரன்கள் விட்டுக் கொடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் கில் கடைசி வரை களத்தில் இருந்து ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர் உடன் 48 பந்தில் 89 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 74 ரன்கள் எடுத்த பொழுது முதல் நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டது. மேலும் கடைசி ஐந்து ஓவர்களுக்கு 62 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. மேலும் சிறந்த பந்துவீச்சாளர்கள் குஜராத் அணியில் இருந்த காரணத்தினால், குஜராத் அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியான நிலையில் இருந்தது.

இப்படியான சூழலில் இந்திய உள்நாட்டு வீரர்கள் சஷான்க் சிங் 61* (29), அசுடோஸ் சர்மா 31 (17) ரன்கள் அதிரடியாக எடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியை கடைசி கட்டத்தில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்கள். சொந்த மைதானத்தில் அடைந்த பஞ்சாப் கிங்ஸ் மாதிரியான சிறிய அணியிடம் தோல்வி அடைந்ததால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

தோல்விக்கு பின் பேசிய குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் கில் ” நாங்கள் இரண்டு பெரிய கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டோம். டி20 போட்டியில் இவ்வளவு நெருக்கத்தில் நீங்கள் இரண்டு கேட்ச்களை தவறவிட்டால் போட்டியை வெல்ல முடியாது. இந்த ஆடுகளத்தில் புதிய பந்து ஏதோ செய்கிறது. அதே சமயத்தில் நாங்கள் எடுத்த ரன் குறைவானது என்று நான் சொல்ல மாட்டேன்.

- Advertisement -

இதையும் படிங்க : 5 ஓவர் 62 ரன்.. 2 புதுமுக உள்நாட்டு வீரர்கள் கலக்கல்.. பஞ்சாப் கிங்ஸ் சேசிங் சாதனை வெற்றி

பதினைந்தாவது ஓவர் வரை நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம். அதற்குப் பிறகு தவறவிட்ட கேட்ச் காரணமாக எங்கள் கையை விட்டு ஆட்டம் போய் விட்டது. கடந்த போட்டியில் நல்கண்டே பந்து வீசிய விதத்தின் காரணமாக அவருக்கு பந்து வீச கடைசி ஓவரை கொடுத்தோம். நீங்கள் பெயர் கேள்விப்பட்டிராதவர்கள் கூட வந்து போட்டியை வெல்ல வைப்பதுதான் ஐபிஎல் தொடரின் அழகு. நாங்கள் சரி செய்ய வேண்டிய பகுதிகளில் கவனம் செலுத்துவோம்” என்று கூறியிருக்கிறார்.