17.2 ஓவர்.. 106 ரன் வித்தியாசம்.. டெல்லி அணியை ஓடவிட்ட கொல்கத்தா.. புள்ளி பட்டியலில் மாஸ்

0
222
KKR

இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் ருத்ர தாண்டவம் ஆடி இருக்கிறது. இன்றைய போட்டியில் டாஸ் முதல் கடைசிப் பந்து வரை கொல்கத்தா அணி முழு ஆதிக்கம் செலுத்தி, 106 ரன்கள் வித்தியாசத்தில், டெல்லி அணியை ஓரம்கட்டி வென்று இருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சுனில் நரைன் 85 (39), பில் சால்ட் 18 (16), அங்கிரிஸ் ரகுவன்சி 54 (27), ஸ்ரேயாஸ் ஐயர் 18 (11) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். கடைசி கட்டத்தில் ரசல் 40 (19), ரிங்கு சிங் 26 (8) ரன்கள் என அதிரடியாக எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

டெல்லி கேப்பிடல் அணியின் பந்துவீச்சில் நோக்கியா மூன்று, விக்கெட் இசாந்த் சர்மா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சமீபத்தில் 277 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்ததை முறியடிக்கும் வாய்ப்பில் இருந்த கொல்கத்தா அணியின் சாதனையை இஷாந்த் சர்மா கடைசி ஓவரில் எட்டு ரன்கள் மட்டும் தந்து தடுத்து நிறுத்தினார்.

இதற்கு அடுத்து மாபெரும் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் 18 (13), ப்ரீத்தி ஷா 10 (7), மிச்சல் மார்ஸ் 0 (2), அபிஷேக் போரல் 0 (5) என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்த நிலையில் ரிஷப் பண்ட் அதிரடியாக 55 (25), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 54 (32) ரன்கள் எடுத்தார்கள்.

இதற்கு அடுத்து வந்த அக்சர் படேல் 0 (1), சுமித் குமார் 7 (6), ராசிக் சலாம் 1 (5), நோர்க்கியா 4 (6), இஷாந்த் ஷர்மா 1* (3) ரன்கள் எடுக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இதையும் படிங்க : இசாந்த் சர்மாவின் டோ யார்க்கர்.. குப்புற விழுந்த ரசல்.. ஆனாலும் எழுந்து கைத்தட்டி பாராட்டு

மூன்றாவது போட்டியில் மூன்றாவது வெற்றி பெற்ற கொல்கத்தா புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. கொல்கத்தா அணியின் தரப்பில் வைபவ் அரோரா மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள். நான்காவது போட்டியில் விளையாடிய டெல்லி அணிக்கு இது மூன்றாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.