6 ஓவருக்கு 78 ரன்.. பவர் பிளேவிலேயே தோற்ற சிஎஸ்கே.. ருதுராஜ் செய்த தவறு என்ன?.. ஹைதராபாத் அபார வெற்றி

0
229
CSK

ஐபிஎல் 17ஆவது சீசனின் 18 வது போட்டியில், சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள், ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்தரா 12(9), கேப்டன் ருதுராஜ் 26(21) ரன்கள் எடுத்து துவக்க ஆட்டக்காரர்கள் ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து உள்ளே வந்த சிவம் துபே, ரகானே உடன் இணைந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். சிவம் துபே 24 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் அடித்து, மொத்தம் 45 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

ஒருமுனையில் மெதுவான ஆடுகளத்தில் பொறுமையாக விளையாடிய ரகானே 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். மொயின் அலி இருக்கும் போது அவருக்கு பதிலாக பேட்டிங் வரிசையில் முன்னே வந்த ரவீந்திர ஜடேஜா இறுதி வரையில் ஆட்டம் இழக்காமல் 23 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். இதற்கு நடுவில் டேரில் மிட்சல் 11 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி மூன்று பந்துகள் இருக்கும் பொழுது வந்த தோனி 2 பந்தில் 1 ரன் எடுத்தார்.

சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தரப்பில், நடராஜன் புவனேஸ்வர் குமார், ஜெயதேவ் உனட்கட் மற்றும் ஷாபாஷ் அகமத் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் செய்த தவறு

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் தீபக்சகர் ஓவரில் கொடுத்த முதல் கேட்ச் வாய்ப்பை மொயின் அலி வீணடித்தார். இன்னொரு துவக்க ஆட்டக்கார அபிஷேக் ஷர்மா அதிரடியில் மிரட்டினார். அவர் மொத்தமாக 12 பந்துகள் மட்டும் சந்தித்து 3 பவுண்டரி மற்றும்4 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்று புள்ளி மூன்று ஓவரில் 50 ரன்கள் எட்டியது. பவர் பிளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் வந்தது. டிராவிஸ் ஹெட் 24 பந்தில் 3 பவுண்டரி 1 சிக்சர் உடன் 31 இடங்கள், எய்டன் மார்க்ரம் 4 பவுண்டரி 1 சிக்சர் உடன் 50 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்த மாதிரி பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் அனுப்பப்பட்ட ஷாபாஷ் அகமத் 19 பந்தில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 15.4 ஒவ்வொரு முடிவில் 26 பந்துகளில் 25 ரன்கள் தேவைப்பட்டது. முடிவில் 18.1 ஓவரில் இலக்கை எட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. ஆட்டம் இழக்காமல் ஹென்றி கிளாசன் 10(11), நிதீஷ் ரெட்டி 14(8) ரன்கள் எடுத்தார்கள். சிஎஸ்கே தரப்பில் மொயின் அலி இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

இதையும் படிங்க : 4,6,6,6,4.. ஐபிஎல் வரலாற்றில் அபிஷேக் சர்மா அட்டகாசமான சாதனை.. பவர் பிளவில் 78 ரன்.. ஹைதராபாத் கலக்கல் பேட்டிங்

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் இடதுகை பேட்ஸ்மேன்களாக இருந்தும், சிஎஸ்கே அணியில் இரண்டு ஆப் ஸ்பின்னர்கள் இருந்தும், அவர்களில் ஒருவரை கூட பவர் பிளேவின் ஆரம்பத்தில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கொண்டு வரவில்லை. முகேஷ் சௌத்ரி வீசிய இரண்டாவது ஓவரில் 26 ரன்கள் அபிஷேக் சர்மா அடித்தார். ருதுராஜின் இந்த நகர்வு சிஎஸ்கே அணிக்கு போட்டியை ஆரம்பத்திலேயே பறித்து விட்டது. தோனியும், இலங்கை அணியும் தீக்சனாவை ஆரம்பத்திலேயே பயன்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.