ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக.. நான் பீல்ட் செட் பண்றதுக்கான காரணம் இதுதான் – உண்மையை சொன்ன இஷான் கிஷான்

0
13321
Ishan

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 29 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இன்றைய போட்டியில் பவர் பிளேவில் 70 ரன்களை மும்பை இந்தியன்ஸ் துவக்க ஜோடி இஷான் கிஷான் மற்றும் ரோஹித் சர்மா எடுத்துக் கொடுத்தார்கள்.

மும்பை இந்தியன்ஸ் துவக்க ஆட்டக்காரர்கள் அமைத்துக் கொடுத்த வலுவான தொடக்கத்தின் காரணமாக, விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்த போதிலும் கூட, மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்களை நோக்கி போவது எளிதாக இருந்தது. கடைசிக் கட்டத்தில் வந்து ரொமாரியோ ஷெப்பர்ட் 10 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 39 ரன்கள் எடுத்தது, மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு இன்னொரு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் திட்டங்களில் நிறைய மாற்றங்கள் இருந்தது. ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் முகமது நபி இருவரும் நேரடியாக பிளேயிங் லெவனில் கொண்டுவரப்பட்டார்கள். ஹர்திக் பாண்டியா நான்காவது இடத்தில் வந்து பேட்டிங் செய்தார். மேலும் இன்றைய போட்டியில் பும்ரா இரண்டாவது ஓவர் வீசினார். இந்த எல்லா மாற்றங்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

மேலும் இந்தப் போட்டியில் ஃபீல்ட் செட்டப் செய்வதில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை விட இசான் கிஷான் நிறைய கவனம் செலுத்தினார். ஸ்டெம்புகளுக்கு பின்னால் இருந்து ஒரு கேப்டன் போல அவர் இந்த விஷயங்களை பார்த்துக் கொண்டது ஆச்சரியமாக இருந்தது.

இதுகுறித்து இஷான் கிஷான் கூறும்பொழுது “இந்த வெற்றியை நான் நன்றாக உணர்கிறேன். அணியில் நிறைய மீட்டிங் நடக்கிறது. பயிற்சியாளர் உடன் நிறைய பேசுகிறோம். நாங்கள் நன்றாக பந்து வீச வேண்டும் என்பது முக்கியமானது. ஒரு கீப்பராக நான் பீல்டர்கள் சரியான திசையில் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்வது முக்கியம். கேப்டனால் பீல்டர்கள் சரியான கோணத்தில் இருக்கிறார்களா? என்பதை கவனிக்க முடிவது கடினம். இந்த இடத்தில்தான் ஒரு விக்கெட் கீப்பராக வேலையை செய்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : 140 கிமீ-க்கு கீழ் குறைந்த வேகம்.. ஒரே ஓவரில் வெளியேறிய மயங்க் யாதவ்.. காரணம் என்ன?.. முழு தகவல்

இன்றைய போட்டியில் நாங்கள் எங்கள் திறமைக்கு ஏற்ப விளையாடினோம் என்று நினைக்கிறேன். இதுதான் நாங்கள் விளையாடும் கிரிக்கெட். பேட்டிங் பவர் பிளேவுக்கு பிறகு விஷயங்கள் எளிதாக இருக்காது என்று எங்களுக்கு தெரியும். எனவே பேட்டிங் பவர் பிளேவை முடிந்தவரை பயன்படுத்த நினைத்தோம்” என்று கூறியிருக்கிறார்.