இதெல்லாம் ரொம்ப ஓவர்.. ரிஷப் பண்ட்க்கு கண்டிப்பா அபராதம் விதிக்கணும் – ஆடம் கில்கிறிஸ்ட் விமர்சனம்

0
78

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

இருப்பினும் இப்போட்டியின் போது டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கள நடுவர்களி டம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரை சிறிது வருத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது.அதிகபட்சமாக ஆயுஷ்பதோனி 55 ரன்கள், கேப்டன் கே எல் ராகுல் 39 ரன்களும் குவித்தனர். இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி பிரேசர் மெக்கார்க் 55 ரன்களும், கேப்டன் ரிஷப் பண்ட் 41 ரன்களும் குவித்ததால் 170 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் போது லக்னோ அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த படிக்கல்லுக்கு, இஷாந்த் ஷர்மா லெக்சைடில் ஒரு பந்தினை வீசினார். அதனைப் பார்த்த கள நடுவர் வைட் என்று அறிவிக்க, பந்து பேட்ஸ்மேன் மேல் பட்டு சத்தம் வந்ததாக கூறி டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மூன்றாவது நடுவரிடம் ரிவ்யூ எடுக்கச் சென்றார். மூன்றாவது நடுவர் ரிவ்யூவை ஆராய்ந்து விட்டு பந்து பேட்ஸ்மேன் படவில்லை என்று கூறி வைட் என்று அறிவித்தார்.

- Advertisement -

இதனால் ஸ்னிக்கோ மீட்டரை காட்டாமல், அது அகலப் பந்து என்று எப்படி அறிவிக்க முடியும் என ரிஷப் பண்ட் அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் அம்பையருக்கும் பன்டிற்கும் இடையேயான உரையாடல் சுருக்கமாக இருந்திருக்க வேண்டும், மேலும்உரையாடலை நீடித்தால் ஒரு வீரருக்கு அபராதம் மிதிக்க நடுவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இதுகுறித்து கில்கிறிஸ்ட் கூறும் பொழுது “நடுவர்கள் ஒரு போட்டியை சிறப்பாக கையாள வேண்டும் என்பதற்கு நான் இன்று இரவு மற்றொரு உதாரணத்தை பார்த்தேன். அது எந்த வடிவிலான கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி. நடுவர்கள் விஷயங்களை சிறப்பாக கையாண்டு முன்னோக்கி நகர்த்த வேண்டும். போட்டியின் போது ரிஷப் பண்ட் ரிவ்யூ எடுத்ததில் மறு ஆய்வு செய்தாரா இல்லையா என்பதில் சிறிது குழப்பம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 பாயிண்ட்ஸ் டேபிள்: 10வது இடத்தில் ஆர்சிபி.. சிஎஸ்கேக்கு உதவிய டெல்லி.. ஏறி வந்த மும்பை இந்தியன்ஸ்

ஆனால் பண்டிற்கும் அம்பயருக்கமான உரையாடல் சுமார் மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரை நீடித்தது. இது ஒரு எளிய உரையாடல்தான். ஆனால் அது இவ்வளவு நேரம் நிகழ்ந்திருக்கக் கூடாது. அம்பயரும் இதை உடனடியாக முடித்துவிட்டு முன்னோக்கி நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் பண்ட் தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -