4,6,6,6,4.. ஐபிஎல் வரலாற்றில் அபிஷேக் சர்மா அட்டகாசமான சாதனை.. பவர் பிளவில் 78 ரன்.. ஹைதராபாத் கலக்கல் பேட்டிங்

0
151
Abishek

இன்று ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியில் மிரட்டி வருகிறார்.

இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற ஹைதராபாத் சன் ரைசர்ஸ் முதலில் சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய வைத்தது. சிஎஸ்கே அணிக்கு சிவம் துபே 24 பந்தில் 45 ரன்கள், ரகானே 30 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்கள். ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு இந்த முறை மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தது. ஆடுகளம் மெதுவாக இருந்ததை பயன்படுத்தி வேகப்பந்து வீச்சாளர்கள் மிக மெதுவாக பந்து வீசி அடிப்பதற்கு பந்தை கொடுக்காமல் பேட்ஸ்மேன்களை சிரமப்படுத்தினார்கள்.

- Advertisement -

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. ஷாபாஷ் அஹமத், புவனேஸ்வர் குமார், நடராஜன், ஜெயதேவ் உனட்கட் நான்கு பேரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். இந்த போட்டிக்கு முன்பாக இரு அணிகளும் தோல்வியில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலக்கை நோக்கி களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் தீபக் சகரின் முதல் ஓவரில் தந்த எளிமையான கேட்ச்சை ஸ்லிப்பில் நின்ற மொயின் அலி கோட்டை விட்டார். அந்த இடத்திலிருந்து சிஎஸ்கே அணிக்கு பிரச்சனைகள் ஆரம்பித்துவிட்டது.

இதற்கு அடுத்து இரண்டாவது ஓவரை முகேஷ் சௌத்ரி வீச வந்தார், அந்த ஓவரை எதிர்கொண்ட இந்திய இளம் வீரர் அபிஷேக் ஷர்மா 4,6,6,6,4 என அதிரடியில் கலக்கி மொத்தம் 26 ரன்கள் எடுத்தார். மேலும் 12 பந்துகள் மட்டுமே சந்தித்து 37 ரன்கள் எடுத்து தீபக் சகர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இன்று பவர் பிளேவின் இரண்டாவது ஓவரில் 26 ரன்கள் எடுத்ததின் மூலம், இதுவரையிலான ஐபிஎல் வரலாற்றில், பவர் பிளேவின் இரண்டாவது ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இது பதிவானது. இதற்கு முன்பாக 2019 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக சுனில் நரைன் வருண் சக்கரவர்த்தியின் பவர் பிளேவின் இரண்டாவது ஓவரில் 24 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது.

இதையும் படிங்க : சிவம் துபே ரசலை பின் தள்ளி சிக்ஸரில் சாதனை. சிஎஸ்கே கடைசி 8 ஓவர்கள் 60 ரன்கள்.. ஹைதராபாத் அசத்தல் பந்துவீச்சு

பவர் பிளேவின் முதல் ஆறு ஓவர்களிலும் ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் :

ஜெய்ஸ்வால் (26)
அபிஷேக் (26)*
கெய்ல் (36)
பட்லர் (26)
கெய்ல்(28)
கிரிஸ் லின் (32)