17ஆவது ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணி மற்றும் பஞ்சாப் அணி மோதிக்கொண்ட போட்டியில், ஹைதராபாத் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல பங்களிப்பு செய்த ஹைதராபாத் இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வெல்ல, முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி முதல் நான்கு முக்கிய விக்கெட்டுகளை சீக்கிரத்தில் எழுந்து நெருக்கடியில் சிக்கியது. இந்த நிலையில் நான்காவது வீரராக வந்த, இரண்டாவது போட்டியில் விளையாடும் நிதீஷ் குமார் ரெட்டி மிகச்சிறப்பான முறையில் விளையாடும் அணியை ஆபத்திலிருந்து காப்பாற்றினார்.
இன்றைய போட்டியில் நிதீஷ் குமார் ரெட்டி 37 பந்துகள் மட்டுமே சந்தித்து நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சித்தர்கள் உடன் மொத்தம் 64 ரன்கள் குவித்து அசத்தினார். இவரது பேட்டிங் காரணமாக ஹைதராபாத் அணி 182 ரன்கள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சவால் கொடுக்கும் ஸ் கோரை கொண்டு வந்தது.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு கடைசியில் வந்த சஷான்க் சிங் மற்றும் அசுட்டோஸ் சர்மா இருவரும் நல்ல போராட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முக்கியமான கட்டத்தில் ஜிதேஷ் சர்மா விக்கெட்டை கைப்பற்றி ஹைதராபாத் அணிக்கு நிதீஷ் குமார் ரெட்டி பந்துவீச்சில் நல்ல திறப்பு முனையையும் தந்தார். பரபரப்பான இந்த போட்டியில் இறுதியில் ஹைதராபாத் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த போட்டியில் 67 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் ஒரு விக்கெட் பற்றி ஆட்டநாயகன் விருது பெற்ற நிதீஷ் குமார் ரெடி பேசும் பொழுது “என்னைப் பொறுத்தவரை என்னுடைய இன்றைய செயல்பாடு என்பது அணிக்கு மட்டுமல்லாது தனிப்பட்ட முறையில் எனக்கும் பெரிய விஷயமாக அமைந்திருக்கிறது. நான் என்னை நம்ப வேண்டும், அணிக்காக நான் களத்தில் இருக்க வேண்டும் என்று என் மனதுக்குள் நான் சொல்லிக் கொண்டேன்.அவர்களுடைய வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.
இதையும் படிங்க : போன வாரம் அறிமுகமாகி இந்த வாரம் உச்சத்துக்கு போயிட்டான்.. ஆக்ரோஷமா மட்டும்தான் விளையாடுவோம் – கம்மின்ஸ் பேட்டி
எனவே நான் சுழற் பந்து வீச்சாளர் வந்ததும் தாக்கி விளையாட ஆரம்பித்தேன். மேலும் தொடர் முழுவதும் குறிப்பாக ஸ்லோ பவுன்சர்கள் நன்றாக வேலை செய்கிறது. எனவே எனது பங்குவீச்சிலும் நான் அதைக் கொண்டு வந்தேன். இதற்காக மைதானத்தின் பெரிய பக்கங்களை பயன்படுத்திக் கொண்டேன். பேட்டிங் பவுலிங் என இரண்டு பக்கத்தில் இருந்தும் அனைத்து நல்ல பங்களிப்பு செய்ய விரும்புகிறேன். நான் இப்படி இருக்கத்தான் எப்பொழுதும் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.