போன வாரம் அறிமுகமாகி இந்த வாரம் உச்சத்துக்கு போயிட்டான்.. ஆக்ரோஷமா மட்டும்தான் விளையாடுவோம் – கம்மின்ஸ் பேட்டி

0
3792
IPL2024

இன்று பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஹைதராபாத் அணிக்காக இரண்டாவது போட்டியில் விளையாடும் நிதீஷ் குமார் ரெட்டி 37 பந்தில் 64 ரன்கள் குவித்து வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்.

இன்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு, முதல் நான்கு விக்கெட்டுகள் 64 ரன்களுக்கு விழுந்தது. இதைத்தொடர்ந்து நான்காவது வீரராக களத்திற்கு வந்த நிதிஷ் குமார் ரெட்டி சிறப்பாக விளையாடி 4 பவுண்டரி 5 சிக்ஸர்கள் உடன் 37 பந்தில் 64 ரன்கள் எடுத்தார். அந்த அணி 182 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இலக்கை நோக்கி தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மேல் வரிசையில் விளையாடிய முக்கிய பேட்ஸ்மேன்கள் யாருமே சரியான பங்களிப்பை கொடுக்கவில்லை. இதன் காரணமாக இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் பேட்டி முழுவதிலும் அழுத்தம் தொடர்ந்தது. ஹைதராபாத்துக்கு கேப்டனாக கம்மின்ஸ் மிகச் சிறப்பான வேலைகளை களத்தில் செய்தார்.

இருந்த போதிலும் ஷஷான்க் சிங் மற்றும் அசுட்டோஸ் சர்மா ஜோடி ஆட்டத்தை கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் எடுத்துச் சென்று, ஹைதராபாத் அணிக்கு பயத்தை காட்டியது. ஒருவழியாக பரபரப்பான இந்த போட்டியில் ஹைதராபாத் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றிக்குப் பின் பேசிய ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ் கூறும்பொழுது “இது மிகவும் சிறந்த ஆட்டம். அவர்கள் முதலில் சிறப்பாக பந்து வீசினார்கள். நாங்கள் 180 ரன்கள் எடுப்பதற்கு சிறப்பாக கடைசியில் பேட்டிங் செய்தோம். ஆனால் போட்டி மிகவும் நெருக்கமாக சென்றுவிட்டது. இம்பேக்ட் இருப்பதின் அழகு என்னவென்றால், நீங்கள் முடிந்தவரை போட்டியை ஆழமாக எடுத்துச் சென்று பெரிய ஸ்கோர்க்கு செல்ல வேண்டும். எப்போதும் பாசிட்டிவாக இருக்க முயற்சி செய்தேன். 150, 160 ரன்கள் எடுப்பதால் நீங்கள் 10 போட்டியில் ஒன்பது போட்டியை தோற்கத்தான் செய்வீர்கள். எனவே ஆக்ரோஷமாக விளையாடுவது முக்கியம்.

- Advertisement -

இதையும் படிங்க : ரெண்டு பசங்களுக்கும் நன்றி சொல்லிக்கிறேன்.. இனி இதை செய்யலனா தப்பிக்க முடியாது – ஷிகர் தவான் பேட்டி

புதிய பந்து அவர்களுக்கு எப்படி வேலை செய்தது என்று நாங்கள் பார்த்தோம். எனவே நான் புவியுடன் இணைந்து ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்த நினைத்தேன். நிதீஷ் குமார் மிகவும் அருமையாக விளையாடினார். கடந்த வாரம் அறிமுகமானார், இந்த வாரம் நேராக பேட்டிங் ஆர்டரின் உச்சத்திற்கு வந்து மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார். மேலும் அவர் இன்று மூன்று ஓவர்கள் பந்தும் வீசியிருக்கிறார். எங்களை 180 ரன்களுக்கு கொண்டு சென்றது அவருடைய பேட்டிங்தான்” என்று கூறி இருக்கிறார்.