நான் என் டீம் பவுலர்களுக்கு ஐடியா சொல்லுவேன்.. ஆனா அவங்க அதை விரும்பனுமே – பும்ரா பேட்டி

0
1592
Bumrah

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் தோல்வி அடைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியில் பும்ராவின் பங்கு பெரிய அளவில் இருந்தது. ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் சில முக்கியமான விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வெல்ல முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்தது. சாம் கரன் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் 14 ரன்களுக்கு 4 விக்கெட், 111 ரன்களுக்கு ஏழு விக்கெட் என சரிந்தது. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் அசுதோஸ் சர்மா 28 பந்தில் அதிரடியாக 61 ரன்கள் குவிக்க ஆட்டம் பஞ்சாப் பக்கம் வந்தது. பரபரப்பான இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தரப்பில் பந்துவீச்சில் பும்ரா நான்கு ஓவர்களுக்கு 21 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே ரூசோவ் மற்றும் சாம்கரன் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். திரும்பி வந்து அதிரடியாக விளையாடிய சஷாங்க் சிங் விக்கட்டை கைப்பற்றினார். மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு பும்ராவின் பங்கு மிகப் பெரியதாக இருந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்குப் பிறகு ஆட்டநாயகன் விருது வென்ற பும்ரா பேசும் பொழுது ” இது ஒரு நெருக்கமான ஆட்டம். நாங்கள் நினைத்ததை விட போட்டி நெருக்கமாக சென்றது. பந்து ஏதாவது ஆடுகளத்தில் செய்யும் பொழுது நீங்கள் ஏதாவது செயல்பட விரும்புகிறீர்கள். டி20 கிரிக்கெட் வடிவத்தில் பந்து இரண்டு ஓவர்கள் மட்டுமே ஸ்விங் ஆகிறது. நான் அதிகமாக பந்து வீச விரும்பும் பொழுது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிக் கொள்கிறேன். அது என்னுடைய பந்து வீச்சு ஆசைகளை நிறைவேற்றுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : அசுதோஸ் சர்மா அடிச்ச அந்த ஒரு சிக்ஸ்.. சீக்கிரம் வெற்றிக்கான ரன்னை நாங்களும் அடிப்போம் – சாம் கரன் பேட்டி

இந்த கிரிக்கெட் வடிவம் பந்துவீச்சாளர்களுக்கு கடினமானதாக இருக்கிறது. இங்கு பந்து வீச்சுக்கு நேர கட்டுப்பாடு மற்றும் இம்பேக்ட் பிளேயர் விதிகள் இருக்கின்றன. இதன் காரணமாக பேட்டிங் நீளம் மிகவும் அதிகரிக்கிறது. எனவே இங்கு பந்துவீச்சாளர்களுக்கு கடினங்கள் அதிகமாக இருக்கிறது. ஆனால் இது எல்லாம் நம் கண்ட்ரோலில் இல்லாத விஷயம். நான் எந்த இடத்தில் பீல்டிங் இருந்தாலும், அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பந்துவீச்சு குறித்த மெசேஜை அனுப்புவேன். ஆனால் ஆட்டத்தின் இப்படியான நேரத்தில் அதிக மெசேஜ்களை பந்துவீச்சாளர்கள் விரும்ப மாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.