1328 நாட்கள் கம்பேக்.. முகமது அமீருக்கு நடந்த சோகம்.. வெறும் 2 பந்து.. முடிவுக்கு வந்த பாக் நியூசி போட்டி

0
9840

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன டி20 கிரிக்கெட் போட்டியில் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீருக்கு சோகத்தையே கொடுத்துள்ளது.

ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பைத் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கு முன்பாக அனைத்து அணிகளும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றன. உலகக் கோப்பைக்கு முன்பாக விளையாடும் டி20 கிரிக்கெட் போட்டிகள் உலகக் கோப்பைக்கு தயாராக ஒரு நல் வாய்ப்பாக அமையும்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. தொடர் தோல்விகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி சாகின் ஷா அப்ரிடி இடமிருந்து பாபர் ஆசாமிற்க்கு கொடுக்கப்பட்டது. 50 ஓவர் உலகக் கோப்பை தோல்வியினால் கேப்டன் பதவியை விட்டு விலகிய பாபர் ஆசம் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு மீண்டும் கேப்டன் பதவி அவரிடமே ஒப்படைக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணியில் வேகப்பந்துவீச்சாளரான முகமது அமீர் 1328 நாட்கள் கழித்து மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்பியுள்ளார். அதாவது கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இவர் தேசிய அணிக்காக போட்டிகள் விளையாடவில்லை. வேகப்பந்துவீச்சை பலப்படுத்தும் முனைப்பில் இவரது வருகை பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும்.

சச்சின் ரவிந்த்ரா, டாரி மிச்சல் மற்றும் சாண்ட்னர் ஆகிய முன்னணி வீரர்கள் இந்தியாவில் ஐபிஎல் விளையாடிக் கொண்டிருக்க, ஆல் ரவுண்டர் பிரேஸ்வெல் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்று இருக்கிறது. ராவுல் பிண்டியில் தொடங்கிய இப்போட்டியில் டாசை இழந்தது பாகிஸ்தான் அணி.

- Advertisement -

இதன்படி பந்துவீச்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் சாஹின் ஷா அப்ரிடி வீச டிம் ராபின்சன் ஜீரோ ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதன்பிறகு செய்பர்ட் மற்றும் சாம்ப்மென் ஆகியோர் களத்தில் இருந்தபோது இரண்டு பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் வெகு நேரமாகியும் மழை நிற்காததால் இரண்டு பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் இப்போட்டி ரத்து செய்யப்பட்டது.

இதையும் படிங்க:140 கிமீ வேகம்.. அசுதோஸ் சர்மா அடித்த ஸ்பெஷல் ஸ்வீப் ஷாட் சிக்ஸ்.. பந்துவீசிய பும்ராவே பாராட்டு

நான்கு வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த முகமது அமீர் இந்த போட்டியில் ஒரு ஓவர் கூட வீசாமல் சோகத்துடனே வெளியேறினார். இரண்டாவது டி20 போட்டி இதே ராவுல்பிண்டி மைதானத்தில் வருகிற சனிக்கிழமை தொடங்குகிறது