எங்க இளம் விக்கெட் கீப்பர் தோனி ஹாட்ரிக் சிக்ஸர் அடித்ததுதான் வித்தியாசம் – ருதுராஜ் ஜாலியான பேட்டி

0
4437
Ruturaj

இன்று மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று இருக்கிறது. பலரும் இரண்டாவது பேட்டிங் செய்யும் மும்பை அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என கணித்திருந்தார்கள். இதைத் தாண்டி வெற்றி பெற்றது குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்தது. இந்த முறை பேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் வந்த கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 69 ரன்கள் எடுத்தார். சிவம் துபே 38 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 66 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இந்த நிலையில் நான்கு பந்துகள் மட்டுமே ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவரில் மிச்சம் இருக்கும் நிலையில் பேட்டிங் செய்ய வந்த மகேந்திர சிங் தோனி, ஹாட்ரிக் சிக்ஸர்கள் உடன் நான்கு பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி முதல் விக்கெட்டுக்கு ஏழு ஓவர்களில் 70 ரன்கள்எடுத்து நன்றாக ஆரம்பித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இறுதி வரை ஆட்டம் இழக்காமல் நின்று 63 பந்துகளில் 11 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் உடன் 105 ரன்கள் குவித்தார். ஆனாலும் அந்த அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. பதிரனா நான்கு ஓவர்களில் 28 ரன்கள் தந்து நான்கு முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார்.

வெற்றிக்குப் பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் நகைச்சுவையாக ஆரம்பித்தார். அவர் பேசுகின்ற பொழுது “எங்கள் இளம் விக்கெட் கீப்பர் வரிசையாக மூன்று சிக்ஸர்கள் அடித்ததுதான் வெற்றிக்கு உதவி இருக்கிறது. அதுதான் ஆட்டத்தில் பெரிய வித்தியாசம் என்று நான் நினைக்கிறேன். இந்த மைதானத்தில் முதலில் விளையாடும் பொழுது 10, 15 ரன்கள் கூடுதலாக எடுக்க வேண்டும். நாங்கள் 215 முதல் 220 ரன்கள் வரும் என்று எதிர்பார்த்து இருந்தோம்.

- Advertisement -

இதையும் படிங்க : பதிரனா மிரட்டல் பவுலிங்.. போராடிய ரோகித் சதம் வீண்.. சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றி

இதேபோல் பந்துவீச்சில் நாங்கள் கடைசிக்கட்ட ஓவர்களில் கவனம் செலுத்தினோம். பவர் பிளேவை பொறுத்தவரை 60 ரன்கள் கொடுப்பதாக இருந்தால் விட்டுவிடுவேன். இந்த வகையான மைதானத்தில் நீங்கள் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக இருக்க வேண்டும். எங்கள் அணியின் மலிங்கா சிறப்பாக யார்க்கர்கள் அடித்தார். மறக்க வேண்டாம் துஷார் மற்றும் சர்துல் இருவரும் சிறப்பாக வீசினார்கள். அனைவரையுமே நாங்கள் ஊக்குவித்தோம்” என்று கூறி இருக்கிறார்.